என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆராய்ச்சி அறிஞர்களுக்கு தேசிய பயிலரங்கம்"

    • காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி அறிஞர்களுக்கு 3 நாள் தேசியப் பயிலரங்கம் நடைபெற்றது.
    • பயிலரங்கத்தில் பலர் கலந்து கொண்டனர்.

    சின்னாளபட்டி:

    காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள சுகாதார அறிவியல் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறையில் உள்ள ஆராய்ச்சி அறிஞர்களுக்கு 3 நாள் தேசியப் பயிலரங்கம் நடைபெற்றது.

    காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக பயன்பாட்டு ஆராய்ச்சி மையப் பேராசிரியர் மற்றும் தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். பல்கலைக்கழகத் துணைவேந்தர் (கூடுதல் பொறுப்பு) பேராசிரியர் டாக்டர் குர்மீத் சிங் தனது தொடக்க உரையில், தொற்றுநோய்களில் பயன்பாட்டு உளவியலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

    சுகாதார அறிவியல் மற்றும் ஊரக வளர்ச்சிப் பள்ளியின் பேராசிரியர் மற்றும் புலத்தலைவர் ராஜா, சமீபத்திய ஆராய்ச்சிக் கருவிகள் மற்றும் நுட்பங்களுடன் ஆராய்ச்சி அறிஞர்களை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    டாக்டர் விஜயபிரசாத் கோபிச்சந்திரன் மற்றும் டாக்டர் சுதர்ஷினி சுப்பிரமணியம் ஆகியோர் உடல்நல ஆராய்ச்சியில் அப்ளைடு சைக்கோமெட்ரிக்ஸ் குறித்து விரிவுரைகளை வழங்கினர்.

    இணைப் பேராசிரியர் ஹிலாரியா சவுந்தரி நன்றி கூறினார். முத்துக்குமரன், கார்த்திக் குணசேகரன் ஆகியோர் அப்ளைடு சைக்கோமெட்ரிக்ஸ் குறித்த இந்த பட்டறையின் பயனுள்ள கற்றல் செயல்முறையை விளக்கினர்.

    ×