என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "3 ஆண்டு சிறை"
- செயின் பறித்ததாக கொடுத்த புகாரின்பேரில் வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
- இவ்வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டியை சேர்ந்தவர் தமிழரசி (42) இவர் கடந்த மார்ச் மாதம் நத்தம்- மதுரை சாலையில் உள்ள நல்லாகுளம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்த ஹரிதர்சன் (26) என்பவர் 6 பவுன் தங்க செயினை பறித்து சென்றார்.
இச்சம்பவம் தொடர்பாக நத்தம் போலீசில் தமிழரசி புகார் செய்தார். அதன் பேரில் நத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து ஹரிதர்சனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி விசாரணை செய்து வந்தார். இந்நிலை யில் இந்த வழக்கு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி உதயசூரியா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் ஹரிதர்சனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளி த்தார்.
- அருணகிரியிடம் பணம் கடன் வாங்கிவிட்டு திருப்பி தராதது சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்தது.
- வழக்கை விசாரித்த செஞ்சி குற்றவியல் நடுவர் மனோகரன் தீர்ப்பினை வாசித்தார்.
விழுப்புரம்:
செஞ்சி அருகே விவசாயி தாக்கப்பட்ட வழக்கில் 2 பேருக்கு தலா 3 வருடம் சிறை தண்டனை விதித்து செஞ்சி கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. செஞ்சியை அடுத்த ஊரணி்த்தாங்கலை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் சுந்தரவடிவேல் விவசாயி. அதே ஊரை சேர்ந்தவர்கள் சின்னகுழந்தை மகன் அருணகிரி (வயது 43). சாமிக்கண்ணு மகன் பாலச்சந்திரன் (53). இவர்கள் சுந்தரவடிவேலுவின் அண்ணன் அருணகிரியிடம் பணம் கடன் வாங்கிவிட்டு திருப்பி தராதது சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்தது. கடந்த 2013-ம் வருடம் நவம்பர் 11-ந்தேதி அருணகிரியும், பாலச்சந்திரனும் சேர்ந்து சுந்தரவடிவேலை ஆபாச மாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் படுகாயமடைந்த சுந்தரவடிவேல் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு செஞ்சி குற்றவியல் நடுவர் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு வழக்கறிஞராக சக்திவேல் ஆஜரானார். அனைத்து கட்ட விசாரணை முடிந்த நிலையில் இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த செஞ்சி குற்றவியல் நடுவர் மனோகரன் தீர்ப்பினை வாசித்தார். இந்த வழக்கில் அருணகிரிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.ஆயிரம் அபராதமும், பாலச்சந்திரனுக்கு 2 பிரிவுகளில் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேற்படி சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு கூறினார். இந்த தீர்ப்பினால் செஞ்சி நீதிமன்ற வளாகமே பரபரப்பாக காணப்பட்டது.
- சந்திரலேகாவை அவரது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தினார்
- கோபாலகிருஷ்ணனுக்கு 3 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.
உளுந்தூர்பேட்டை அருகே கிரிமேடு கிராமத்தில் வசிப்பவர் சந்திரலேகா (வயது 30). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவருக்கும் 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சந்திரலேகாவை அவரது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப டுத்தியதால் அவருடன் வாழாமல் தாய் வீட்டில் வாழ்ந்து வந்தார். மேலும், இது தொடர்பாக கடந்த 2014-ல் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சந்திரலேகா புகார் அளித்தார். இந்த வழக்கு உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் 2-ல் கடந்த 2015 முதல் நடந்து வருகிறது. இந்த வழக்கினை நீதிபதி வெங்கடேஷ்குமார் விசாரித்து வந்தார். இந்நிலையில் சந்தி ரலேகாவை வரதட்சிணை கேட்டு கொடுமை படுத்திய கோபாலகிருஷ்ணனுக்கு 3 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். இதை யடுத்து கோ பாலகிருஷ்ணன் சிறையில் அடைக்கப்பட்டார்.
- கரூர் அருகே திருகாம்புலியூர் பகுதியை சேர்ந்த வர் செல்வகனி, (வயது42)லாரி டிரைவர்.
- விபத்தில் திருச்சியை சேர்ந்த சுப்பிரமணி(57) கரூர் ராயனுாரை சேர்ந்த கந்தசாமி (58), ஆகியோர் உயிரிழந்தனர்.
கரூர்
கரூர் அருகே திருகாம்புலியூர் பகுதியை சேர்ந்த வர் செல்வகனி, (வயது42)லாரி டிரைவர். கடந்த, 2011 மே மாதம் கரூரில் மாரியம்மன் கோவில் திருவிழா வையொட்டி, கம்பம் ஆற்றுக்கு செல்லும் விழா நடந்தது.
அப்போது, எதிர்பாராதவிதமாக செல்வ கனி ஓட்டி சென்ற லாரி, கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது. விபத்தில் திருச்சியை சேர்ந்த சுப்பிரமணி(57) கரூர் ராயனுாரை சேர்ந்த கந்தசாமி (58), ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், எட்டு பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து, கரூர் டவுன் போலீசார் லாரி டிரைவர் செல்வகனியை கைது செய்து கரூர் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அதில், லாரி டிரைவர் செல்வ கனிக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனையும், 31 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து, நீதிபதி ராஜலிங்கம் தீர்ப்பு அளித்தார். லாரி டிரைவர் செல்வகனி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்