search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ணகிரி வாலிபர்"

    • கல்லூரியில் பணிபுரியும் தைவான் நாட்டை சேர்ந்த சியாங் ஷியா ஜோன் என்பவருக்கும், ராஜேந்திரனுக்கும் ஜப்பானில் காதல் மலர்ந்துள்ளது.
    • மணமகளின் சகோதரரும் வெளிநாட்டில் இருந்து இந்த திருமணத்தில் கலந்து கொண்டார்.

    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த ஆவத்துவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் ஜப்பானில் உள்ள கொயோட்டோ யுனிவர்சிட்டியில் விஞ்ஞானி மற்றும் கல்லூரி விரிவுரையாளராகவும் பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் அந்த கல்லூரியில் பணிபுரியும் தைவான் நாட்டை சேர்ந்த சியாங் ஷியா ஜோன் என்பவருக்கும், ராஜேந்திரனுக்கும் ஜப்பானில் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் காதலை தங்கள் வீட்டில் தெரிவித்துள்ளார்கள். இதனால் இருவரது வீட்டிலும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் தமிழ் முறைப்படி திருமணம் செய்ய ஜப்பானிலிருந்து சியாங் ஷியா ஜோன், ராஜேந்திரனும் காவேரிப்பட்டணம் வந்தனர்.

    இன்று காலை காவேரிப்பட்டணம் கோட்டை பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில் நிர்வாகி அருள் மூர்த்தி முன்னிலையில் ராஜேந்திரன், சியாங் ஷியா ஜோன் ஆகியோருக்கு உறவினர்கள் புடைசூழ திருமணம் நடைபெற்றது. மணமகளின் சகோதரரும் வெளிநாட்டில் இருந்து இந்த திருமணத்தில் கலந்து கொண்டார்.

    இந்த திருமணம் குறித்து மணமகள் சியாங் ஷியா ஜோன் கூறியபோது நாங்கள் இருவரும் காதலித்தோம். இந்நிலையில் திருமணம் செய்ய இரு வீட்டார் சம்மதத்துடன் இந்தியா வந்தோம். இன்று தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார்.

    ×