என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நடுரோடு"
- சாலையின் நடுவில் வீட்டின் படுக்கை அறையில் படுப்பது போன்று கால்மேல் கால் போட்டு படுத்துக் கொண்டார்.
- ரகளையால் காரைக்குடி பர்மா காலனி சாலை சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
காரைக்குடி:
மனிதனுக்கு இரண்டு கண்கள் என்றால், சமூக வலைதளத்துக்கு பார்ப்பதெல்லாம் கண்கள்தான். பொது வெளியில் நடக்கும் சம்பவம் அடுத்த விநாடி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அதில் ஈடுபட்ட நபரை கதிகலங்க வைத்து விடுகிறது. இதனால் சிக்கிக்கொண்டோரும், பிரபலமானவர்களும் பலர்.
அதிலும் குறிப்பாக மது போதையில் சிலர் செய்யும் வேடிக்கைகள் ஒருபுறம் ரசிக்க வைத்தாலும், அதற்கு லைக் கொடுத்து, கருத்து சொல்பவர்களின் வார்த்தைகள் சவுக்கடிக்கு சமமாகவும் இருந்துள்ளது. வேடிக்கை, வினோதங்களின் மூலம் தங்களை ஈர்ப்பதற்காகவும் ஒருசிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
அந்த வகையில் செட்டி நாடு புகழ் காரைக்குடியிலும் ஒரு சம்பவம் அரங்கேறி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி பகுதியான காரைக்குடி அறந்தாங்கி செல்லும் சாலை நேற்று மாலை வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது. அப்போது அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் அந்தி சாயும் மாலை வேளையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மது போதையில் அந்த பகுதிக்கு வந்தார்.
அரைக்கால் டவுசர், பனியன் அணிந்திருந்த அவர் வெயில் குறைந்த மழை வாசம் அடித்த குளுகுளு சாலையின் நடுவில் வீட்டின் படுக்கை அறையில் படுப்பது போன்று கால்மேல் கால் போட்டு படுத்துக் கொண்டார். மேலும் தனது டவுசர் பையில் வைத்திருந்த செல்போனை எடுத்து அதனை பார்த்துக் கொண்டே அந்த சாலையை கடந்து சென்ற பெண்களை பார்த்து கேலி, கிண்டலும் செய்தார்.
தலைக்கேறிய போதை, தடுமாற்றத்துடன் கூடிய நடை, போதைக்கு ஊறு காயாக கேலி, கிண்டல் வேறு என்று அந்த வாலிபரின் எல்லை அத்துமீறி போனது. பலர் வேடிக்கை பார்க்க, சிலர் செல்போன்களில் வீடியோ எடுக்க, இதெல்லாம் நமக்கு எதற்கு என்று கண்டுகொள்ளாமல் சென்றனர் மற்றும் பலர். அறிவுரை கூறி அப்புறப்படுத்த நினைத்து அருகில் சென்றவர்கள் அச்சத்துடன் திரும்பி வந்தனர்.
ஏதாவது அசம்பாவித சம்பவத்தில் அவர் இறங்கினால் என்று எண்ணி, நமக்கேன் வம்பு வந்த வழியாக திரும்பினர். இருந்தபோதிலும் பொதுமக்களுக்கு இடையூறாகவும், அவர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் நடந்து கொண்ட வாலிபரை அங்கிருந்து அனுப்பி வைக்க அதே பகுதியைச் சேர்ந்த சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சொக்கலிங்கம் முயற்சி மேற்கொண்டார்.
உடனடியாக இதுபற்றி அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தும் யாரும் வர வில்லை. இதற்கிடையே சாலையில் நடுவில் படுத்திருந்த அந்த வாலிபர் எழுந்து ரோட்டில் அங்குமிங்கும் சென்றார். பின்னர் ஒரு மரத்தடியில் சென்று அமர்ந்து கொண்டார். அக்கம்பக்கத்தினர் மூலம் அவரது நண்பர்களை வரவழைத்து ஒருவழியாக போதை வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த ரகளையால் காரைக்குடி பர்மா காலனி சாலை சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
- தீயணைக்கும் படையினர் போராடி அகற்றினர்
- நேற்று மாலை “திடீர்” என்று சூறாவளி காற்று வீசியது
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் சந்திப்பில் இருந்து வட்டக்கோட் டைக்கு செல்லும் சாலையில் உள்ள லெட்சுமிபுரம் சந்திப்பில் 100ஆண்டு பழமை வாய்ந்த நாவல்மரம் ஒன்று உள்ளது.
இந்த மரத்தில் உள்ள ராட்சத மரக்கிளை நேற்று மாலை "திடீர்" என்று வீசிய சூறாவளி காற்றில் நடுரோட்டில் முறிந்து விழுந்தது. இந்த மரக்கிளை கொட்டாரம் சந்திப்பில் இருந்து வட்டகோட்டை செல்லும் சாலையும் கொட்டாரம் பெருமாள் புரம் வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன் கோவில் முன்புஇருந்து பொட்டல் குளம் செல்லும் சாலையும் சந்திக்கும் நான்கு முக்கு ரோடு சந்திப்பில் முறிந்து விழுந்ததால் அந்தப் பகுதியில் போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஆனால் அந்தப் பகுதியில் மரம் முறிந்து விழும்போது எந்தவித வாகனங்களும் செல்லாததால்பெரும்உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுபற்றி தகவல்அறிந்ததும் கன்னியாகுமரிதீயணைக் கும்படைவீரர்கள்சம்பவ இடத்துக்குவிரைந்து சென்று பல மணி நேரம்போராடி அந்த ராட்சத மரக்கிளை களை உடனடியாகவெட்டிஅப்புறப்படுத்தினார்கள்.
அதன் பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
- காதலி உள்பட 4 பேர் மீது போலீசில் புகார்
- சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை
கன்னியாகுமரி:
குமரி மேற்கு மாவட்டம் வேர் கிளம்பி பகுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் டிப்ளமோ படித்து விட்டு தற்போது வெல்டிங் வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் அதே பகுதி யைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட் டது. இதையடுத்து இருவ ரும் நேரில் சந்தித்து பேசி னார்கள். தங்களது காதலை வளர்த்து வந்த நிலையில் காதல் விவகாரம் இருவர் வீட்டு பெற்றோருக்கும் தெரிய வந்தது.
இந்த நிலையில் பெற் றோர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். 2 ஆண்டு களுக்கு பிறகு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. திருமணம் நிச்சயிக்கப்பட்டதையடுத்து காதலர்கள் இருவரும் உல்லாச வானில் சிறகடித்து பறந்தனர். காதலிக்கு ஏராள மான பரிசு பொருட்க ளையும் அவர் வாங்கிக் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் கல்லூரி மாணவி கடந்த சில மாதங்களாக தனது காதலனுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். இதனால் காதலனுக்கு தனது காதலி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை சில நாட்களாக பின் தொடர்ந்து சென்று கண்காணித்தார். அப்போது கல்லூரி மாணவி அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த டிரைவர் ஒருவருடன் நெருங்கி பழகுவது தெரிய வந்தது. இருவரும் மோட்டார் சைக்கிளில் சுற்றித் திரிந்தனர்.
இது குறித்து அந்த வாலிபர் தனது காதலியிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் எனக்கு உன்னை பிடிக்கவில்லை என்று கூறியதுடன் எனது பக்கத்து வீட்டை சேர்ந்த டிரைவரை தான் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் மனமுடைந்தார்.
பின்னர் தனது காதலி யிடம் தான் கொடுத்த பரிசு பொருட்களை திரும்பத் தருமாறு கேட்டுள்ளார்.இந்த நிலையில் நேற்று கல்லூரி மாணவி தனது முன்னாள் காதலனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.அப்போது வேர் கிளம்பி பகுதிக்கு வருமாறும் தான் பரிசுப் பொருட்களை திரும்ப தருவதாகவும் கூறி னார்.
இதையடுத்து அந்த வாலிபர் தனது மோட்டார் சைக்கிளில் வேர் கிளம்பி பகுதிக்கு வந்தார். அப்போது கல்லூரி மாணவி தனது புதிய காதலனுடன் மோட் டார் சைக்கிளில் வந்து இறங்கினார். அப்போது தனது பழைய காதலனிடம் பரிசு பொருட்களை தர முடியாது என்று கூறி அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். உடனே இவரும் அந்த மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து சென்றார்.
திடீரென மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் இவரை தடுத்து நிறுத்தி சரமாரியாக தாக்கினார்கள். அப்போது கல்லூரி மாணவி யும் அவரது காதலனும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.படுகா யம் அடைந்த வாலிபர் சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க் கப்பட்டார்.
இது குறித்து கொற்றி கோடு போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரில் தன்னை தாக்கிய இரண்டு வாலிபர்கள் மீதும் தனது காதலி மற்றும் டிரைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி யுள்ளார். மேலும் அவர்கள் தாக்குவது போன்ற சி.சி.டி.வி. காட்சிகளையும் அவர் போலீசாரிடம் ஒப்ப டைத்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகி றார்கள். பரிசுப் பொருட் களை வாங்க வரவழைத்த இடத்தில் காதலனை வாலி பர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.
- சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ
- வெளியூர் நிகழ்ச்சிக்கு மாணவ-மாணவிகளை அழைத்து சென்ற போது நடனம்
நாகர்கோவில்:
நாகர்கோவில் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளியில் உள்ள மாணவ-மாணவிகள் மதுரை அருகே உள்ள பள்ளி ஒன்றில் நடந்த பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்வதற்காக தயாரானார்கள். இதையடுத்து பள்ளியி லிருந்து வேனில் மாணவ- மாணவிகள் மதுரைக்கு புறப்பட்டனர்.
மாணவ-மாணவிகளுடன் ஆசிரியைகளும் சென்றிருந்தனர். மதுரை அருகே ஓட்டல் ஒன்றில் உணவு அருந்துவதற்காக வேன் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது மாணவ மாணவிகள் குத்தாட்ட பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடினர். மாணவ-மாணவி களு டன் ஆசிரியை ஒருவரும் நடனம் ஆடினார். மாணவ மாணவிகள் கூச்சல் சத்தத்துடன் நடனம் ஆடி கொண்டிருந்ததை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
இந்த வீடியோ தற்பொ ழுது சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியுள்ளது. அந்த வீடியோவில் ஆசிரியை மாணவர் ஒரு வரின் கையைப் பிடித்துக் கொண்டு நடனம் ஆடுவது போன்று உள்ளது. மேலும் மாணவ மாணவிகள் நடன மாடும் வீடியோவும் வைர லாகி உள்ளது.
வெளியூர் நிகழ்ச்சிக்கு மாணவ-மாணவிகளை அழைத்து சென்ற போது நடு ரோட்டில் மாணவர்களு டன் ஆசிரியை நடன மாடும் சம்பவம் பெற்றோர் கள் மத்தியில் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக அதிகா ரிகள் விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள்.
- போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
- போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் இருந்து கோவளம் செல்லும் புதிய பஸ் நிலைய ரோட்டில் சிலுவை நகர் அருகே டாஸ்மாக் அரசு மது கடை பக்கம் நடுரோட்டில் நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அவருக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கவிழ்ந்து கிடந்தது. அப்போது அந்த பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததால் அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில்1.45 மணிக்கு அந்த வழியாக வந்த யாரோ சில நபர்கள் பார்த்து இது பற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன் பேரில் கன்னியா குமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில் அவர் பரமக்குடியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 27) என்பது தெரிய வந்தது. அவர் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தாரா? அல்லது வேறு ஏதாவது வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தாரா? அல்லது யாராவது சமூக விரோத கும்பல் அவரை தாக்கியதில் படுகாயம் அடைந்தாரா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்