என் மலர்
நீங்கள் தேடியது "தொடக்க விழா கொண்டாட்டம்"
- அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 51-வது ஆண்டு தொடக்க விழா நேற்று கொண்டாடப்பட்டது.
- அன்னதானம் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 51-வது ஆண்டு தொடக்க விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, ஓசூர் ராயக்கோட்டை ரோடு சர்க்கிளில் உள்ள எம்ஜி.ஆர். சிலைக்கு, மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி மாலையணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து, ஓசூர் மாநகர தெற்கு பகுதியில், பகுதி செயலாளரும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான பி.ஆர். வாசுதேவன் தலைமையில் நடந்த விழாவில் கலந்து கொண்டு கட்சிக்கொடி ஏற்றி வைத்தும் கேக் வெட்டி, இனிப்பு, அன்னதானம் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதேபோல், மாநகர வடக்கு , மேற்கு, கிழக்கு பகுதிகளிலும் கட்சிக்கொடி ஏற்றி வைத்தும், பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம், மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில், பகுதி செயலாளர்கள், அசோகா, ராஜி, மஞ்சுநாத் மாநகர எதிர்க்கட்சி தலைவர் நாராயணன், ஓசூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் நடராஜன், மண்டலத் தலைவர் ஜெயப்பிரகாஷ், மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.