என் மலர்
நீங்கள் தேடியது "அதிபர் மேக்ரான்"
- சிறுவன் கொல்லப்பட்டது மன்னிக்க முடியாத குற்றம்.
- பொதுமக்கள் அமைதியை கடைபிடிக்க வேண்டும்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நாந்த்ரே பகுதியில் உள்ள சிக்னலில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றது.
இதையடுத்து போலீசார் அந்த காரை சுற்றி வளைத்து டிரைவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த காரை ஓட்டி சென்ற ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த நேல் என்ற 17 வயது சிறுவன் தலையில் குண்டு பாய்ந்து காருக்குள்ளேயே இறந்தார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
போலீசாரின் இந்த நடவடிக்கை பிரான்ஸ் நாட்டு பொதுமக்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் பாரீஸ் உள்ளிட்ட நகரங்களில் போராட்டத்தில் குதித்தனர். நாடு முழுவதும் பல இடங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தின் போது வன்முறை சம்பவங்கள் வெடித்தது.
கார்கள், பள்ளிகள், போலீஸ் நிலையங்கள், குப்பைத்தொட்டிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பல பகுதிகளில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் நடந்தது. வன்முறைகளில் ஈடுபட்டவர்களை போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தனர். நேற்று இரவும் 3-வது நாளாக கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டது. இந்த கலவரத்தில் இதுவரை 40 கார்கள் சேதம் அடைந்தது.
போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் 170 போலீசார் காயம் அடைந்தனர். வன்முறையில் ஈடுபட்டதாக போலீசார் 180-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.
கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக 40 ஆயிரம் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் முக்கிய நகரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வன்முறையை தடுக்க பாரீஸ் புறநகர் பகுதியான கிளமார்ட் பகுதியில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வருகிற திங்கட்கிழமை வரை இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிரான்ஸ் நாட்டில் பொதுமக்களின் போராட்டம்-வன்முறை சம்பவங்கள் நீடித்து வருவதால் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உயர் மட்ட குழுவை கூட்டி அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வன்முறையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் இம்மானுவேல் மேக்ரான் கூறும் போது சிறுவன் கொல்லப்பட்டது மன்னிக்க முடியாத குற்றம். குற்றவாளி தண்டிக்கப்படுவார். பொதுமக்கள் அமைதியை கடைபிடிக்க வேண்டும்.பள்ளிகள்,போலீஸ்நிலையங்கள்,குடியரசுக்கு எதிரான வன்முறையை நியாயப்படுத்த முடியாது என்று தெரிவித்து உள்ளார்.
- நாட்டர்டாம் தேவாலயத்தில் கடந்த 2019-ம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது.
- இதில் அந்த தேவாலயம் கடுமையாக சேதம் அடைந்தது.
பாரிஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள நாட்டர்டாம் தேவாலயத்தில் கடந்த 2019-ம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த தேவாலயம் கடுமையாக சேதம் அடைந்தது.
இதையடுத்து, பிரான்ஸ் அதிபரான இம்மானுவல் மேக்ரோன் தேவாலயத்தை 5 ஆண்டுகளுக்குள் புனரமைப்பு செய்வதாக உறுதி அளித்திருந்தார்.
அதன்படி, சுமார் 750 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டு நாட்டர்டாம் தேவாலயம் புனரமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாரிசின் புகழ்பெற்ற இடங்களில் ஒன்றான நாட்டர்டாம் தேவாலயம் 5 ஆண்டுக்குப் பிறகு பொதுமக்களின் வழிபாடுகளுக்காக இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
இந்த தேவாலய திறப்பு விழாவில் அதிபர் இம்மானுவல் மேக்ரான், அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்றனர்.
ஒரு சாத்தியமற்ற மறுசீரமைப்பை பிரான்ஸ் சாத்தியப்படுத்தி உள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
- இந்தியா ஒரு சிறந்த மனிதரை இழந்துவிட்டது என்றார் அதிபர் மேக்ரான்.
- அவரது மறைவுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மாஸ்கோ:
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கு அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இலங்கை, நேபாளம், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ரஷிய அதிபர் புதின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
மன்மோகன் சிங் ஒரு சிறந்த அரசியல்வாதி. பிரதமராகவும், பிற உயர் பதவிகளில் பணியாற்றியபோதும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், உலக அரங்கில் அதன் நலன்களை வலியுறுத்துவதிலும் அவர் நிறைய சாதித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவுகளை வலுப்படுத்துவதற்கு அவர் தனிப்பட்ட பங்களிப்பை அளித்தார். அவருடன் நான் பலமுறை பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவரை நினைவு கூருவோம் என தெரிவித்தார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்:
இந்தியா ஒரு சிறந்த மனிதரை இழந்துவிட்டது. மன்மோகன் சிங்கின் ஆளுமையில் இந்தியா ஒரு சிறந்த மனிதரையும், பிரான்ஸ் ஒரு உண்மையான நண்பரையும் இழந்துவிட்டது. அவர் தனது வாழ்நாளை தனது நாட்டிற்காக அர்ப்பணித்தார். எங்கள் எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் இந்திய மக்களுடனும் உள்ளன என தெரிவித்தார்.
பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார்:
இந்தியா-பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்த மன்மோகன் சிங்கின் மறைவு வருத்தம் அளிக்கிறது. பாகிஸ்தானில் பிறந்த அவர், ஒரு சிறந்த பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல் தலைவராக இருந்தார். அவரது ஞானம் மற்றும் மென்மையான நடத்தைக்காக அவர் நினைவுகூரப்படுவார். பிராந்திய பிரச்சனைகளில் அவரது அணுகுமுறை பரஸ்பர புரிதல், உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை கூட்டு முன்னேற்றத்திற்கு அவசியம் என்ற அவரது நம்பிக்கையை பிரதிபலித்தது. பாகிஸ்தான்-இந்தியா உறவுகளை மேம்படுத்துவதில் அவர் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார். பாகிஸ்தான் மக்களும், அரசும் மன்மோகன் சிங்கின் குடும்பத்தினருக்கும், இந்திய மக்களுக்கும், இந்திய அரசிற்கும் எங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவிக்கின்றன என்றார்.
அமெரிக்க வெளியுறவு மந்திரியான ஆண்டனி பிளிங்கன் இந்தியா, அமெரிக்கா நட்பு சிறப்பாக செயல்பட மிகச்சிறந்த சாம்பியன்களில் ஒருவராக மன்மோகன்சிங் திகழ்ந்தார் என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், இலங்கை, நேபாளம், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
- அணுசக்தியில் இந்தியா, பிரெஞ்சு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க பிரான்ஸ் மந்திரி இங்கு வந்துள்ளார்.
- பிரான்ஸ் அதிபர் மேக்ரான் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வரவுள்ளார்.
புதுடெல்லி:
அணுசக்தியில் இந்தியா-பிரெஞ்சு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க பிரான்ஸ் மந்திரி கிறிசோலா ஜக்கரோபவுலோ தற்போது இந்தியா வந்துள்ளார்.
மத்திய மந்திரி ஜிதேந்திரா சிங்கை சந்தித்து, கூட்டு ஒத்துழைப்புடன் மகாராஷ்டிர மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள ஜெய்தாபூர் தளத்தில் அணு உலைகள் அமைப்பதை விரைவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து ஆலோசித்தார்.
இந்தியாவுடன் அணுசக்தி ஆலோசகர் தாமஸ் மியூசெட் உள்ளிட்ட பிற பிரான்ஸ் அதிகாரிகள் இந்த ஆலோசனையில் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அடுத்த ஆண்டின் (2023) தொடக்கத்தில் இந்தியாவுக்கு வரக்கூடும் என அணுசக்தித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.