என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாட்ஸ் அப்பில்"
- போதைப்பொருள்கள் தடுப்பு சம்பந்தமாக கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடை பெற்றது.
- வாட்ஸ்-அப் மூலமாகவும் தங்களது புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொரு ள்கள் தடுப்பு சம்பந்தமாக மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலை மையில் நடை பெற்றது.
கூட்டத்தில் வருவாய் துறை, காவல் துறை, டாஸ்மாக், வனத்துறை, கலால் துறை, சுகாதாரத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பாக தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்களிடம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது:
கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மது பானம் விற்பனையில் ஈடுபடு வர்களின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நட வடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது. மேலும் போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயங்கள் காய்ச்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வாரம் தோறும் ஒவ்வொரு அலுவலர்களும் இப்பணியில் மேற்கொண்ட முன்னேற்ற நடவடிக்கைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். போலி மது பானங்கள் விற்பனை செய்வது தொடர்பாக வரும் புகார்கள் மீது உடனுக்குடன் சம்பந்த ப்பட்ட கள அலுவலர்கள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
சட்ட விரோதமாக மது பானங்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது புகார்கள் அளிக்க மாநிலஅளவில் தகவல் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 மற்றும் மாவட்ட மது விலக்கு அமலாக்கப்பிரிவு, துணை போலீஸ் சூப்பிரண்டு கட்டுபாட்டில் செயல்படும் 94429 00373 என்ற எண்ணிற்கு நேரடியாகவும், வாட்ஸ்-அப் மூலமாகவும் தங்களது புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.
தகவல் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். மேலும் ஈரோடு மாவட்டத்தில் மது விலக்கு தொடர்பாக வட்ட, கோட்ட மற்றும் மாவட்ட அளவில் வருவாய்த்துறை, காவல்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வரப்பாளையம், ராயபாளையம், கடத்தூர் மற்றும் நம்பியூர் ஆகிய இடங்களில் தீவிரமாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் அரசு ஒதுக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து நேரம் கடந்து மது விற்பனை செய்தவர்கள் மீது 122 வழக்குகளும், மற்றும் பிற மாநிலங்களில் இருந்து மது பானம் எடுத்து வந்ததற்காக 7 வழக்குகளும் என மதுவிலக்கு தொடர்பாகசு மார் 129 குற்றவாளிகள் கண்டறியப்பட்டு 129 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களில் 25 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, சப்-கலெக்டர் (பயிற்சி) பொன்மணி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், ஜெயபால், பவித்ரா (மதுவிலக்கு அமலாக்க பிரிவு), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ், ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஸ்குமார், மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மோகன சுந்தரம், உதவி ஆணையர் (கலால்) சிவக்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தயானந்தன் பேன் மாட்டும் கொக்கியில் தூக்குமாட்டி தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது மகன் தயானந்தன் (20). இவர் கோபியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 10 வருடங்களாக அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்து படித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தயானந்தன் தங்கி இருக்கும் வீட்டின் உறவினரான யுவராஜ் என்பவரின் செல்போன் வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் தயானந்தன் இரவு 1 மணிக்கு இறந்து விடுவதாக காண்பித்து உள்ளது. உடனே யுவராஜ் தயானந்தனின் தந்தை மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து தயானந்தன் இருந்த வீட்டின் அறை கதவை தட்டி உள்ளனர்.
கதவு தாழ்ப்பாள் போட்டு இருந்ததால் ஜன்னல் வழியே பார்த்த போது தயானந்தன் பேன் மாட்டும் கொக்கியில் கயிற்றில் தூக்குமாட்டி தொங்கி கொண்டிருந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே உறவினர்கள் கதவின் தாழ்ப்பாளை உடைத்து தயானந்தனை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தயானந்தன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் விசாரணையில் தயானந்தன் சிறு வயது முதலே அதிகமாக யாரிடமும் பேசாமல் தனிமையாக இருந்து வந்ததாக தெரிகிறது. விரக்தியில் இருந்து வந்த தயானந்தன் வாழ பிடிக்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
- உணவு பொருட்கள் தொடர்பான புகார்களை வாட்ஸ் அப்பில் தெரிவிக்க நுகர்வோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
- பெரம்பலூரில் விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்
பெரம்பலூர்:
பெரம்பலூரில் உணவு பொருள் விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு உணவு பாதுகாப்பு துறை பெரம்பலூர் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கவிக்குமார் தலைமை வகித்து பேசினார்.
அப்போது அவர் கூறும் போது, பெரம்பலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு மற்றும் கார வகைகள் மற்றும் பேக்கரி தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006, அதன் விதிமுறைகள் 2011-ன்படி கண்டிப்பாக உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு பெற்றிருக்க வேண்டும். தரமான மூலப்பொருட்களை தெரிந்த உணவு வணிகர்களிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும். அதற்கான முறையான ரசீது பெறப்பட்டிருக்க வேண்டும்.
சுகாதாரமான முறையில் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கப்பட வேண்டும். உணவு தயாரிக்கும் இடத்திற்குள் பூச்சிகள் நுழையாவண்ணம் பூச்சி கட்டுப்பாடு முறைகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். பணியின்போது பணியாளர்கள் கையுறை, தலைக்கவசம், மேலங்கி அணிந்தே பணியாற்ற வேண்டும். உணவு தயாரிப்பில் அனுமதித்த அளவிற்குள் மட்டுமே செயற்கை வண்ணங்களை பயன்படுத்த வேண்டும்.
நுகர்வோர்கள் உணவு பொருள் தொடர்பான புகார் ஏதேனும் இருந்தால் 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இனிப்பு மற்றும் கார வகைகள், பேக்கரி தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உரிய வழிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தவறுபவர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கூட்டத்தில் பேக்கரி தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்