search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர் நியமனம்"

    • திருமங்கலம் அருகே அரசு பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வட்டார கல்வி மையத்தில் நேரில் சென்று குறைகளை கேட்டார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 120 மாணவர்களுக்கு 4 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் இருப்பதால் கூடுதலாக 2 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பெற்றோர்கள் திருமங்கலம் வட்டார கல்வி மையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என தெரிவித்தனர்.

    இதுபற்றி அறிந்த முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் வட்டார கல்வி மையத்தில் நேரில் சென்று இது தொடர்பாக கேட்டார். இதைத்தொடர்ந்து உடனடியாக புதிய ஆசிரியர்களை நியமிக்க ஆணையை பெற்று திருமங்கலம் அருகே சித்திரெட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ஆணையை வழங்கினர்.

    தொடர்ந்து ஆசிரியர்கள் 6,7,8-ம் வகுப்பிற்கு நிரந்தர பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதான கட்டிடங்களை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் மாவட்ட கல்வி அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

    இதற்கு இடையே திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட அ.வலையப்பட்டி கிராமத்தில் மழைக்கு சேதம் அடைந்த வீடுகளை பார்வையிட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்றார். அப்போது வலையபட்டி உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து மழையால் வீடு இழந்த வர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து அரிசி மற்றும் காய்கறி, உதவித்தொகை ஆகியவற்றை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியின் போது ஒன்றிய செயலாளர் அன்பழகன், பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன், மாவட்ட பொருளாளர் திருப்பதி, யூனியன் சேர்மன்லதா, ஜெகன், மீனவரணி மாவட்ட செயலாளர் சரவணபாண்டி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் சிங்கராஜ்பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • இதர பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு 45-ல் இருந்து 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
    • ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2021-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கு உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு பொருந்தும்.

    சென்னை:

    ஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்களுக்கு உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 40-ல் இருந்து 45 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதர பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு 45-ல் இருந்து 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2021-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கு உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு பொருந்தும்.

    ×