search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கம்ரான் அக்மல்"

    • டி20 உலகக் கோப்பையில் இந்தியா , பாகிஸ்தான் அணிகள் நாளை மோதுகின்றன.
    • இம்முறை இந்தியாவை வீழ்த்துவதற்கு பாகிஸ்தானுக்கு வாய்ப்புள்ளது என்கிறார் கம்ரான் அக்மல்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பரான கம்ரான் அக்மல் தனியார் யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியாவின் பேட்டிங் வரிசை சரியாக இருப்பதாக எனக்கு தெரியவில்லை. விராட் கோலி 3-வது இடத்தில் களமிறங்கினால் அழுத்தத்தை உள்வாங்கி வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பார். அதுவே இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது.

    யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களமிறங்கி, விராட் கோலி 3-வது இடத்தில் வரவேண்டும். விராட் கோலியை இந்தியா தொடக்கமாக களமிறக்கினால் அவர்கள் ஏதோ ஒரு இடத்தில் சிக்கக்கூடும். பொதுவாக விராட் கோலி ஒருபக்கம் நங்கூரமாக நின்று போட்டியை வெற்றிகரமாக முடிக்கக்கூடியவர்.

    எனவே, விராட் கோலியை தொடக்கத்தில் களமிறக்கி இந்தியா மிகப்பெரிய தவறு செய்துள்ளது என நினைக்கிறேன். இந்தியா தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். பும்ரா, சிராஜ் ஆகியோர் நன்றாக பந்து வீசுகின்றனர். ஹர்திக் பாண்ட்யா விக்கெட்டுகளை எடுத்தார். ஒரே மைதானத்தில் அவர்களுக்கு 3 போட்டிகள் நடைபெறுவது கண்டிப்பாக சாதகமாக இருக்கும். இதுபோன்ற போட்டிகளுக்கு ஐ.சி.சி. தரமான மைதானத்தை அமைக்கவேண்டும். இல்லை என்றால் ரசிகர்கள் சென்றுவிடுவார்கள் என தெரிவித்தார்.

    • நாட்டுக்காக விளையாட வெளியேறிய இந்த முடிவு மிகவும் நியாயமானது என்றார் வாகன்.
    • பாகிஸ்தான் பற்றி மைக்கேல் வாகன் கூறியது உண்மைதான் என்றார் கம்ரான் அக்மல்.

    கராச்சி:

    டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்காக நடப்பு ஐ.பி.எல். தொடரிலிருந்து ஜாஸ் பட்லர், மொயீன் அலி, ரீஸ் டாப்லி, வில் ஜாக்ஸ் போன்ற இங்கிலாந்து வீரர்கள் பிளே ஆப் சுற்றுக்கு முன்பே வெளியேறினர்.

    இதனால், முழுமையாக விளையாடுங்கள். இல்லையெனில் ஐ.பி.எல். தொடரில் விளையாட இந்தியாவுக்கு வராதீர்கள் என இர்பான் பதான் விமர்சித்தார். அதேபோல, பாதியில் வெளியேறும் இங்கிலாந்து வீரர்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும் என சுனில் கவாஸ்கர் விமர்சித்தார்.

    இதற்கிடையே, நாட்டுக்காக விளையாடுவதற்காக வெளியேறிய இந்த முடிவு மிகவும் நியாயமானது என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் பதிலடி கொடுத்திருந்தார். மேலும், சுமாரான பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதைவிட தரமான ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதே சிறந்தது என தெரிவித்தார். இதற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த சில முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில், சமீப காலங்களில் அயர்லாந்து போன்ற கத்துக்குட்டி அணிகளிடம் தோல்வியைச் சந்தித்த பாகிஸ்தான் பற்றி மைக்கேல் வாகன் கூறியது உண்மைதான் என கம்ரான் அக்மல் ஒப்புக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக கம்ரான் அக்மல் கூறியதாவது:

    அது மிகவும் வலியைக் கொடுக்கும் கருத்தாகும். ஆனால் அவருடைய கருத்து சரியானது என நினைக்கிறேன்.

    அனைவருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் லெவல் தெரியும். இப்போதெல்லாம் நாம் அயர்லாந்து போன்ற சிறிய அணிக்கு எதிராக தோற்கிறோம்.

    எனவேதான் பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் கடினமானது அல்ல என மைக்கேல் வாகன் தெரிவித்தார். அதனால் தவறு நம்முடையது.

    ஒருவேளை நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து விளையாடியிருந்தால் அவர் அப்படி சொல்லியிருக்க மாட்டார்.

    ஐ.பி.எல். தொடரைப் பற்றி நாம் புரிந்துகொள்ள வேண்டும். அங்கே 40,000 முதல் 50,000 ரசிகர்களுக்கு முன் சிறந்த பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் பங்கேற்கின்றனர். எனவே அது கடினமான மற்றும் தரமான கிரிக்கெட்டாகும் என தெரிவித்தார்.

    • ஒரு கெட்ட வார்த்தையில் திட்டிய அவருக்கு நான் 20 கெட்ட வார்த்தைகளை பதிலடியாக திருப்பிக் கொடுத்தேன்.
    • டோனி ரெய்னா மட்டும் இடையே வரலனா அது இன்னும் மோசமான சண்டையாக மாறியிருக்கும்.

    ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தடுத்து நடக்கவுள்ளது. இதில் விளையாடும் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்திற்காக ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

    இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய இருதரப்பு தொடரில் இஷாந்த் சர்மா மோசமான கெட்ட வார்த்தையால் தம்மை திட்டியதாக கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இஷாந்த் சர்மா என்னை கெட்ட வார்த்தையால் திட்டினார். குறிப்பாக ஒரு கெட்ட வார்த்தையில் திட்டிய அவருக்கு நான் 20 கெட்ட வார்த்தைகளை பதிலடியாக திருப்பிக் கொடுத்தேன். இங்கே நான் உண்மையாக பேசுகிறேன். அந்தப் போட்டியை தொடர்ந்து அகமதாபாத் நகரில் அடுத்த நாள் நடைபெற இருந்த டி20 போட்டிக்காக நாங்கள் விமானத்தில் பயணம் மேற்கொண்டோம். அப்போது நான் விராட் கோலி, சோயப் மாலிக், முகமது ஹபீஸ் ஆகியோர் ஒரே வரிசையில் அமர்ந்திருந்தோம். அந்த சமயத்தில் எங்கள் இருவருக்குமிடையே உண்மையாக என்ன நடந்தது என சிலர் கேட்டனர்.

    அப்போது அங்கிருந்த இஷாந்த் சர்மா என்னிடம் கெட்ட வார்த்தை பேசியதாக அவர்களிடம் சொன்னார். அதற்கு நீங்கள் திரும்ப வாங்கிக்கொண்ட கெட்ட வார்த்தைகளுக்கு தகுதியானவர் தான் என்று அவர்கள் அவரிடம் சொன்னார்கள். அந்தளவுக்கு அது மோசமான தருணமாக அமைந்தது. இருப்பினும் டோனி மற்றும் சுரேஷ் ரெய்னா இடையே வந்தனர். அவர்களுக்கு யார் மீது தவறு இருந்தது என்று தெரிந்த காரணத்தால் உடனடியாக நிலைமையை சமாளித்தனர். இல்லையெனில் அது இன்னும் மோசமான சண்டையாக மாறியிருக்கும்.

    குறிப்பாக எனக்கு 2 போட்டிகள் தடையுடன் 5 போட்டிகளுக்கான சம்பளம் அபராதமாக விதிக்கப்பட்டிருக்கும். அந்தளவுக்கு அந்த தருணம் மோசமாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுப்மான் கில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார்.
    • இதுவரை ஐந்து டி20 போட்டிகளில் விளையாடிய சுப்மன் கில் 76 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

    ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அசத்தி வரும் சுப்மன் கில், டி20 போட்டிகளில் சுமாராகவே விளையாடி வருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான கடந்த இரண்டு டி20 போட்டிகளில் கில் 7 மற்றும் 11 ரன்கள் எடுத்துள்ளார். இதனால் அவருக்கு பதிலாக பிரித்வி ஷா-வை களமிறக்க வேண்டும் என விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது.

    இந்நிலையில் கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்கலாம் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கம்ரான் அக்மல் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சுப்மான் கில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் டி20 போட்டிகளில் அவர் இதுவரை அதை செய்யவில்லை. அவர் இன்னும் ஒரு போட்டியில் விளையாடி சொதப்பினாலும் கூட நம்பிக்கையை இழந்துவிடுவார்.

    மற்ற 2 வடிவங்களில் சிறப்பாக விளையாடி வரும் ஃபார்மும் பாதிபடைந்துவிடும். இதுபோன்ற ஒரு வீரர் டி20 கிரிக்கெட்டில் ஆட வேண்டும் தான். ஆனால் அவருக்கு கடைசி போட்டியில் ஓய்வு கொடுத்து வைத்தால் மட்டுமே புத்துணர்ச்சியுடன் இருப்பார். அடுத்த போட்டிகளிலாவது பழைய ஃபார்முடன் இருப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுவரை ஐந்து டி20 போட்டிகளில் விளையாடிய சுப்மன் கில் 76 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணி 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை ஜெயிக்கவில்லை என்று பேசப்படுகிறது.
    • ஒருமுறை கூட உலக கோப்பையை கைப்பற்றாத தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எல்லாம் தடை தான் விதிக்க வேண்டும்.

    இந்திய அணி இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவருகிறது. 2013-ம் ஆண்டுக்கு பின் இந்திய அணி கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஐசிசி கோப்பையையும் வென்றதில்லை. 2015 மற்றும் 2019 ஒருநாள் உலக கோப்பைகளில் அரையிறுதியில் தோற்று தொடரை விட்டு வெளியேறி ஏமாற்றமளித்தது. 2017-ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் பாகிஸ்தானிடம் தோற்று கோப்பையை இழந்தது.

    எனவே இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையை வெல்ல வேண்டிய அழுத்தம் இந்திய அணிக்கு உருவாகியுள்ளது. அதனால் அதற்காக தீவிரமாக தயாராகிவருகிறது. கேப்டன் டோனிக்கு பிறகு 2013-ம் ஆண்டுக்கு பின் கடந்த 10 ஆண்டுகளாக எந்த கேப்டனும் இந்திய அணிக்கு ஐசிசி கோப்பையை ஜெயித்து கொடுக்கவில்லை என்ற விமர்சனம் இருந்துவருகிறது. 10 ஆண்டுகளாக ஒரு உலக கோப்பையைக்கூட ஜெயிக்காதது குறித்து விவாதிக்கப்படுகிறது.

    இந்நிலையில், ஐசிசி உலக கோப்பையை ஜெயிப்பது மட்டுமே கிரிக்கெட் அல்ல என்பதை உணர்த்தும் விதமாக இந்திய அணிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல்.

    இதுகுறித்து கம்ரான் அக்மல் பேசியதாவது:-

    இந்திய அணி 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை ஜெயிக்கவில்லை என்று பேசப்படுகிறது. ஒவ்வொரு முறையும் ஐசிசி கோப்பையை ஜெயித்துக்கொண்டே இருக்க முடியாது.

    ஐசிசி கோப்பையை ஜெயிப்பது மட்டுமே முக்கியம் என்றால், இதுவரை ஒருமுறை கூட உலக கோப்பையை கைப்பற்றாத தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எல்லாம் தடை தான் விதிக்க வேண்டும். இந்திய அணி மிகச்சிறந்த கிரிக்கெட் அணி. வித்தியாசமான முறையில் விளையாடி வருகிறது.

    இவ்வாறு கம்ரான் அக்மல் கூறியுள்ளார்.

    • சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை 0-3 என இழந்தது.
    • இங்கிலாந்து பாஸ்பால் (BazBall) அணுகுமுறை கடைபிடித்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    இங்கிலாந்து அணி கடந்த 2005-ம் ஆண்டுக்குப்பின் முதன்முறையாக பாகிஸ்தான் சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. மூன்று போட்டிகளிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது.

    இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் ஆகிய இருவரும் அச்சமின்றி அதிரடியாக விளையாட வேண்டும் என்ற மனப்போக்கு கொண்டவர்கள். அவர்கள் எண்ணம்போல் இங்கிலாந்து அணி செயல்பட்டது.

    பாகிஸ்தான் அணியால் எந்த வகையிலும் ஈடுகொடுக்க முடியாமல் போனது. இதனால் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பாகிஸ்தான் அணியை வசை பாடி வருகின்றனர். குறிப்பாக பாபர் அசாம் கேப்டன் குறித்து முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

    முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கூறியதாவது:-

    எந்தவொரு அணிக்கும் பாகிஸ்தான் மண்ணில் தொடரை வெல்வது மிகப்பெரிய சாதனையாக இருக்கும். இங்கிலாந்துக்கு இது மிகப்பெரிய சாதனை. இங்கிலாந்து நீண்ட வருடம் கழித்து பாகிஸ்தான் மண்ணில் விளையாட வந்தனர். இது வரலாற்று தொடரை. அவர்கள் பாகிஸ்தானை ஒரு சரித்திரம் ஆக்கினார்கள். அவர்கள் நம்மிடம் ''உங்களுடைய கிரிக்கெட், மனநிலை, சிஸ்டம் ஆகியவற்றை அம்பலப்படுத்திவிட்டோம். தற்போது, அதை எப்படி முன்னேற்ற முடிவு செய்யப் போகிறீர்கள்'' என தெரிவித்துள்ளனர்.

    நாம் எங்கே தவறு செய்தோம் என்று நமக்குத் தெரியும். நமது அணிக்காக அறிமுகம் ஆனவர்கள், அதற்கு தகுதியானவர்கள்தானா?. நாம் ஆடுகளத்திற்கு ஏற்ப 11 பேருடம் விளையாடினோமா?. கேப்டன் தொழில் சரியாக செய்யப்படவில்லை. நீங்கள் பென் ஸ்டோக்ஸ், பாபர் அசாமின் கேப்டன் பதவியை பாருங்கள். பாபர் அசாம்தான் பாகிஸ்தானின் நீண்ட நாள் கேப்டனாக இருந்துள்ளார். குறைந்த பட்சம் தற்போதாவது முதிர்ச்சி அடைந்திருக்கனும். சிறந்த முடிவுகளை எடுத்திருக்கனும். மைதானத்தில் தங்களுடைய இருப்பை சிறந்ததாக ஆக்கியிருக்கனும். அவரிடம் எந்தவிதமான நேர்மறையாக விசயங்களும் தென்படவில்லை.

    முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து, எவ்வொரு முறையும் பத்திரிகையாளர் சந்திப்பு, வர்ணனையாளர்கள், மீடியாக்களில் ஒவ்வொருவரும் பாகிஸ்தானை இங்கிலாந்து டாமினெட் செய்ததாக பேசினார்கள். ஒருவர் கூட நம்பை பற்றி பேசவில்லை. பாராட்டவில்லை. ஏனென்றால், நாம் எதிர்மறையாக அணுகுமுறையுடன் விளையாடினோம்'' என்றார்.

    • ஜெய் ஷா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அறிவிப்புகள் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • ஆசிய கோப்பை திட்டமிட்டபடி பாகிஸ்தானில் தான் நடைபெற வேண்டும் என கம்ரான் அக்மல் வலியுறுத்தினார்

    கராச்சி:

    பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்தார். மேலும், ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் அல்லாத நடுநிலையான இடத்திற்கு மாற்றப்படலாம் என்றும் கூறினார்.

    ஜெய் ஷாவின் இந்த கருத்து பாகிஸ்தான் கிரிக்கெட் சமூகத்திடம் இருந்து கடும் கண்டனங்களுக்கு வழிவகுத்தது. ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் அல்லாத நடுநிலையான இடத்திற்கு மாற்றப்பட்டால், இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பையை பாகிஸ்தான் அணி புறக்கணிக்க வாய்ப்பு உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. ஜெய் ஷா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த அறிவிப்புகள் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியாவுக்கு எதிரான டி20 உலக கோப்பை ஆட்டத்தை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், "ஜெய் ஷாவின் இந்த பேச்சை நான் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் கடந்த முறை இந்தியா பாகிஸ்தான் ஆசிய கோப்பையில் விளையாடிய போது அவர் மைதானத்தில் நேரில் வந்து பார்த்தார். ஜெய் ஷா விளையாட்டில் அரசியலை கொண்டுவர கூடாது. ஆசிய கோப்பை திட்டமிட்டபடி பாகிஸ்தானில் தான் நடைபெற வேண்டும். அப்படி இல்லை என்றால் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்க கூடாது. இதே போன்று எவ்வித ஐசிசி போட்டியிலும் பாகிஸ்தான் இந்தியாவுடன் மோதக் கூடாது' என்றார்.

    வரும் ஞாயிறு அன்று நடைபெறும் இந்தியா- பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டி திட்டமிட்டபடி நடைபெறும். ஆனால், பிசிசிஐ-யின் இந்த நடவடிக்கை, எதிர்வரும் ஐசிசி நிகழ்வுகளில் இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.

    ×