search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டீன்"

    • டிண்டர் எனும் ஆப் மிகவும் பிரபலமானது.
    • டெல்லியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படித்துக் கொண்டு இருக்கும் இளைஞர் டிண்டரில் வர்ஷா என்ற பெண்ணிடம் பேசி வந்துள்ளார்.

    தற்பொழுது உள்ள சமூதாயத்தில் இளைஞர்கள் தங்களின் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதற்கு பல ஆப்கள் மற்றும் வெப்சைட்டுகள் வந்துவிட்டது.

    அதில் டிண்டர் எனும் ஆப் மிகவும் பிரபலமானது. இதில் உங்களுக்கு பிடித்த பெண்களுக்கு அவருக்கும் உங்களை பிடித்திருந்தால் அவர்களுடன் நீங்கள் பேசலாம். இவ்வாறு டிண்டரில் தன்னுடைய வாழ்க்கை துணை கிடைத்தவர்கள் ஏராளம்.

    ஆனால் இதே டிண்டர் ஆப்பில் நாம் பல்வேறு மோசடிகளையும் கேள்வி பட்டிருப்போம் அதேப் போல் மற்றொரு மோசடி டெல்லியில் நடந்துள்ளது.

    டெல்லியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படித்துக் கொண்டு இருக்கும் இளைஞர் டிண்டரில் வர்ஷா என்ற பெண்ணிடம் பேசி வந்துள்ளார். இவ்வாறு டிண்டரில் ஆரம்பித்த இந்த காதல் நாளடைவில் வளர்ந்துள்ளது. வர்ஷாவின் பிறந்தநாளை டெல்லியில் உள்ள ப்ளாக் மிரர் கஃபேவில் கொண்டாட வருகிறார் அந்த இளைஞன்.

    கஃபேவில் இருவரும் பேசிவிட்டு இரண்டு கேக்குகள், ஸ்னாக்ஸுகள் மற்றும் சிலவற்றை ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் திடீரென்று வர்ஷா தனது குடும்பத்தில் ஏதோ பிரச்சனை என்று கூறிவிட்டு அவசரமாக அந்த இடத்தை விட்டு செல்கிறார் வர்ஷா.

    இதைதொடர்ந்து, ஆர்டர் செய்ததை சாப்பிட்டுவிட்டு பில் செலுத்தலாம் என்று சென்ற இளைஞனுக்கு காத்திருந்தது அதிர்ச்சி. பில் கட்டணம் சில ஆயிரத்தில் இல்லை 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் என்று இருந்தது.

    செய்வதறியாமல் திகைத்து நின்ற இளைஞனிடம் இருந்து அந்த கஃபே உரிமையாளர் பணத்தை செலுத்தும்படி மிரட்டியுள்ளார்.

    வேறு வழியில்லாமல் அவரும் பணத்தை கட்டிவிட்டு நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்று புகாரளித்துள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

    அதில், பிளாக் கஃபேவை பாவா, அன்ஷ் க்ரோவர் மற்றும் வன்ஷ் பாவா ஆகிய மூவரும் இணைந்து நடத்தி வருகின்றனர்.

    வர்ஷா என்ற பெண்ணும் இதில் கூட்டு களவானி என்றும் அவளின் உண்மையான பெயர் அஃப்சன் பர்வீன் என்றும் தெரியவந்துள்ளது.

    ஆர்யன் அந்த இளைஞரிடம் டிண்டரில் பேசி, பர்வீனின் புகைப்படத்தை வர்ஷா என்ற பெயரில் அனுப்பி வைத்து, கடந்த ஜூன் 23 ஆம் தேதி அந்த கஃபேவிற்கு வரவழைத்துள்ளது தெரியவந்துள்ளது.

    அவள் திடீரென குடும்ப அவசரம் என்று சென்றவுடன், அந்த கஃபேவை நடத்தி வந்த ஆர்யன் வேண்டுமென்றே அந்த பில்லை கொடுத்துள்ளார். இதை ஒரு குழுவாக செய்துள்ளனர்.

    மேலும், அந்த பெண்ணுக்கு போலீசார் வலை வீசிய நிலையில், அவள் ஷாதி டாட் காம் திருமண ஆப் மூலம் சந்தித்த ஒரு ஆணுடன் டேட் செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த பெண் உள்பட கஃபே உரிமையாளர்களையும் போலீசார் பிடித்து காவலில் வைத்துள்ளனர்.

    இச்சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிண்டர் உபயோகிக்கும் இளைஞர்கள் இதை கருத்தில் கொண்டு உஷாராக இருக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

    • இன்ஸ்டாகிராமில் நாளுக்கு நாள் இளைஞர்களின் ஈடுபாடு அதிகமாகிக்கொண்டே தான் இருக்கிறது.
    • இன்ஸ்டாகிராமில் எந்த அளவு வணிக ரீதியாகவும், நண்பர்களுடன் பேசவும், பொழுது போக்கும் செயலியாக இருந்தாலும் அதில் சில ஆபத்துகளும் இருக்கிறது.

    நமது தினசரி வாழ்க்கையில் நாம் செல்போனில் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறோம். இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போடுவது, போஸ்ட் போடுவது மேலும் அதில் எத்தனை லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் பெற்றது என்பதை பார்க்க நமக்கு வழக்கம் ஆகிவிட்டது.

    இன்ஸ்டாகிராமில் நாளுக்கு நாள் இளைஞர்களின் ஈடுபாடு அதிகமாகிக்கொண்டே தான் இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் எந்த அளவு வணிக ரீதியாகவும், நண்பர்களுடன் பேசவும், பொழுது போக்கும் செயலியாக இருந்தாலும் அதில் சில ஆபத்துகளும் இருக்கிறது.

    பெண்களுக்கு ஆபாசமான மெசேஞ்களும், தகாத வார்த்தையை பயன்படுத்தி திட்டுவதும், கேளி செய்வதும் , பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதும் என தினமும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.

     

    இதற்கு தீர்வு காணும் வகையில் இன்ஸ்டாகிராம் லிமிட் மற்றும் ரெஸ்டிரிக்ட் இரண்டு புதிய பாதுகாப்பு அம்சத்தை கொண்டுவந்துள்ளனர். இந்த அம்சத்தின் மூலம் நமது போஸ்டை யார் காணலாம், யார் மெசேஜ், கமண்ட் , டேக் செய்வது என்பதை நாம் முடிவெடுக்கலாம். நாம் பார்க்க கூடாது என்று நினைக்கும் நபர் நமது புகைப்படத்திற்கு கமெண்ட், மெசேஜ்கள் செய்தாலும் அது நமக்கோ பிறர்கோ காண்பிக்காது. நிர்வாண புகைப்படங்களை தெரியாத நபருக்கு அனுப்பினால் அது இன்ஸ்டாகிராம் தானாகவே மறைத்துவிடும் என இந்த அம்சத்தை இளைஞர்களின் பாதுகாப்புகாக முன்னெடுத்து அறிமுகப்படுத்தியுள்ளனர்.

    • மருத்துவக் கல்லூரி டீன் முருகேசன் உடல் தானம் செய்த 3 பேரின் குடும்பத்துக்கு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
    • மாணவர்கள் கவனம் சிதறாமல் படிக்க வேண்டும் என்றார்.

    திருப்பூர் :

    திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரியில் உடற்கூறியல் துறை சார்பில் உடற்கூறியல் தினம் தொடர்பான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடந்தது. உடற்கூறியல் துறைத்தலைவர் ராஜேஸ்வரி வரவேற்றார்.மருத்துவக் கல்லூரி டீன் முருகேசன், உடல் தானம் செய்த 3 பேரின் குடும்பத்துக்கு, சான்றிதழ் வழங்கி கவுரவித்த பின் பேசியதாவது:-மருத்துவக் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைப்பதற்கு மாணவர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மாண வர்கள் நல்லொழுக்கத்துடன் இருந்து, நம் கல்லூரிக்கு பெருமை தேடித்தர வேண்டும். மாணவர்கள் இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.அடுத்த ஆண்டு மாணவர்கள் வந்தாலும், நம் கல்லூரியில் ராகிங் என்ற பேச்சுக்கே இடம் கொடுக்க கூடாது. உடற்கூறு துறையில் தெரிந்து கொள்ள வேண்டியவை நிறைய உள்ளது. மாணவர்கள் கவனம் சிதறாமல் படிக்க வேண்டும் என்றார்.

    தொடர்ந்து, உடற்கூறு தினம் எனும் தலைப்பில், மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான ஓவியம், கற்பனை திறனை வெளிப்படுத்தும் போட்டிகள் நடத்தப்பட்டது.மனித உடல் பாகங்களை வரைந்து அவை எவ்வாறு இயங்குகிறது, இதயம், நுரையீரல், மூளை செயல்பாடுகள் குறித்து மாணவர்கள் பங்கேற்றவர்களுக்கு எடுத்துரைத்தனர்.பொது மருத்துவத்துறை இணை பேராசிரியர் செண்பகஸ்ரீ, அறுவைசிகிச்சை துறை பேராசிரியர் உமா ஆகியோர் மாணவர்களின் ஓவியம், படைப்புகளை ஆய்வு செய்து, சிறப்பு படைப்புகளை தேர்வு செய்தனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக உடற்கூறியல் துறை அரங்கத்தை டீன் முருகேசன் திறந்து வைத்தார்.

    ×