search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசாமி கைது"

    • நாமக்கல் திருச்செங்கோட்டை சேர்ந்த பெண் ஒருவர் வரன் தேடி ஆன்லைனில் பதிவிட்டு இருந்ததை ரவிச்சந்திரன் பார்த்தார்.
    • பெண் பல் டாக்டரிடம் இருந்து வாங்கிய பணத்தில் இரண்டு சொகுசு கார்கள் வாங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    கரூர்:

    கோவை பேரூர் சுண்டக்காமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 42). இவருக்கு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு மனைவியிடம் விவாகரத்து பெற்றார். அதன் பின்னர் திருமண தகவல் மையம் மூலம் 2-வது திருமணம் செய்ய பெண் தேடி வந்தார்.

    அப்போது நாமக்கல் திருச்செங்கோட்டை சேர்ந்த பெண் ஒருவர் வரன் தேடி ஆன்லைனில் பதிவிட்டு இருந்ததை ரவிச்சந்திரன் பார்த்தார்.

    பின்னர் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, அவரிடம் தனது பெயர் ரவிச்சந்திரன் என்றும் மொத்த வியாபாரம் செய்து வருவதாகவும் அறிமுகம் செய்து கொண்டார். மேலும் தனக்கு சொந்தமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளது. சென்னையில் 60 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு, பெங்களூருவில் பங்களா என சகட்டு மேனிக்கு பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டார்.

    அவரது பந்தாவான தோற்றம், சொகுசு கார்கள் போன்றவை அந்த கைம்பெண்ணை நம்ப வைத்தது. பின்னர் உங்களை நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என ஆசைவார்த்தை கூறினார்.

    அவரது பேச்சில் உருகிய அந்தப் பெண் திருமணத்திற்கு சம்மதித்து செல்போன்களில் அடிக்கடி பேசி வந்தனர்.

    பின்னர் ஒரு நாள் அந்த செல்போனுக்கு தொடர்பு கொண்டு தனக்கு திருமண தடை தோஷம் இருப்பதாகவும், அதற்கு பரிகாரம் செய்ய வேண்டி இருப்பதால் பணம் தேவைப்படுகிறது என கேட்டார்.

    அந்த பெண்ணும் வருங்கால புருஷன் தானே கேட்கிறார் என்று தன்னிடம் இருந்த 167 சவரன் நகைகளை கொடுத்தார். பின்னர் அந்த பெண்ணுடன் தொடர்பை துண்டித்தார். பின்னர் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது.

    இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட அந்தப் பெண் பேரூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் தலைமறைவாக இருந்த ரவிச்சந்திரனை வலைவீசி தேடி வந்தனர். அப்போது அவரது செல்போன் டவரை வைத்து தேடியதில் கரூரில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு சென்ற போலீசாருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.

    போலீசார் அவரை சுற்றி வளைத்தபோது ஒரு பெண்ணும் அவருடன் இருந்தார். விசாரணையில் கரூரை சேர்ந்த அந்த பெண் பல் டாக்டராக இருப்பது தெரியவந்தது.

    திருச்செங்கோட்டை சேர்ந்த பெண்ணின் நகையை பறித்துக்கொண்டு கரூரில் உள்ள பல் டாக்டருக்கு வலைவீசி பேசியுள்ளார்.

    வழக்கம்போல் திருமண ஆசை காட்டி அவரையும் மயங்க செய்தார். அதைத்தொடர்ந்து அந்த பெண் டாக்டரை ஏமாற்றி கணவன் மனைவி போல ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். எப்போதும் வீட்டில் நிரந்தரமாக ரவிச்சந்திரன் தங்குவதில்லை.

    அவ்வப்போது அந்த பெண் டாக்டரை பார்க்கச் செல்லும் அவர், தனது மோசடி அம்பலமாகிவிடும் என கருதி லாட்ஜ் மற்றும் விடுதிகளிலேயே தங்கி வந்துள்ளார்.

    மேலும் கரூர் பெண் பல் டாக்டரிடம் இருந்து வாங்கிய பணத்தில் இரண்டு சொகுசு கார்கள் வாங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இவ்வாறு பெண்களை குறி வைத்து அவர்களிடம் பணம் நகைகளைப் பெற்றுக் கொண்டு வேறு பெண்களுடன் இருந்ததும் அம்பலமாகி உள்ளது.

    ரவிச்சந்திரனின் வலையில் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மேலும் சில பெண்கள் விழுந்து நகை பணத்தை தொலைத்து இருக்கிறார்கள்.

    ஆனால் குடும்ப கவுரவம் கருதி அவர்கள் போலீசில் புகார் அளிக்காமல் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் கரூர் மற்றும் கோவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • மாதேவியிடம் தகராறு செய்து அவர் கொண்டு சென்ற நிலக்கடலையை பறித்துள்ளார்.
    • அஞ்செட்டி போலீசார் வழக்கு பதிந்து குமாரை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகேயுள்ள மாவனட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மனைவி மாதேவி (வயது 35).

    இவர் தனது தங்கையின் வீட்டுக்கு செல்வதற்காக புறப்பட்டார். அப்போது ஒரு கூடையில் நிலக்கடலை எடுத்து சென்றுள்ளார்.

    வழியில் குடிபோதையில் வந்த அதே பகுதியை சேர்ந்த குமார் (40) என்ற ஆசாமி மாதேவியிடம் தகராறு செய்து அவர் கொண்டு சென்ற நிலக்கடலையை பறித்துள்ளார்.

    இதை கண்டித்த மாதேவியை தரக்குறைவாக பேசிய குமார் அவரது ஆடையை கிழித்தும் மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து மாதேவி கொடுத்த புகாரின்பேரில் அஞ்செட்டி போலீசார் வழக்கு பதிந்து குமாரை கைது செய்தனர்.

    இதேபோல காவேரிபட்டணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் ரோந்து சென்றபோது காவேரிபட்டணம்-கிருஷ்ணகிரி சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி தகாத வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்ட சாம்சன்பேட்டை பகுதியை சேர்ந்த நரேன் (எ)இளமாறன் (32) என்பவரை கைது செய்தார்.

    • அம்மாவாசை இன்று அதிகாலையில் புதுவை மாநிலத்திலிருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்துள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து அம்மாவாசையை கைது செய்தனர்

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே பேரங்கியூர் பகுதியை சேர்ந்தவர் அம்மாவாசை (வயது 55). இவர் இன்று அதிகாலையில் புதுவை மாநிலத்திலிருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து அதே பகுதியில் உள்ள இவரது வீட்டின் பின்புறம் வைத்து விற்பனை செய்துள்ளார். அப்போது திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர்.

    இதில் அம்மாவாசை கையும் காலமாக பிடிபட்டார். உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து அம்மாவாசை கைது செய்தனர் அவரிடம் இருந்து புதுவை 6 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடத்தி வந்த மது பாட்டில்களை எங்கு வைத்துள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    ×