என் மலர்
நீங்கள் தேடியது "சபா குழு"
- நகராட்சி அலுவலர் ஒருவர் வார்டு பகுதி சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேர் கொண்ட குழு அமைத்தது.
- 3 மாதத்திற்கு ஒருமுறை கூட்டம் நடத்தி மக்களின் குறைகளை நகர மன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.
சீர்காழி:
சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் 24 வார்டுகளில் பகுதி சபா குழு அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் தலைமை வகித்தார்.
நகராட்சி ஆணையர் வாசுதேவன், நகர மன்ற துணைத் தலைவர் சுப்பராயன், மேலாளர் காதர்கான், நகர அமைப்பு ஆய்வாளர் நாகராஜன், வருவாய் ஆய்வாளர் சார்லஸ், கணக்கர் ராஜ கணேஷ் முன்னிலை வைத்தனர்.
கூட்டத்தில் நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் ஒரு வார்டுக்கு அந்தப் பகுதியில் உள்ள கவுன்சிலர் தலைமையில் நகராட்சி அலுவலர் ஒருவர் வார்டு பகுதி சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேர் கொண்ட குழு அமைத்து 3 மாதத்திற்கு ஒருமுறை ஆலோசனைக் கூட்டம் நடத்தி மக்களின் குறைகளை அறிந்து நகர மன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதில் நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.