search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்கலேட்டர்ஸ்"

    • மயிலாடுதுறையை சுற்றி முக்கிய வழிபாட்டுத்தலங்கள் உள்ளன.
    • மத்திய மந்திரி முருகன் கோரிக்கையை ஏற்று ரெயில்வே மந்திரி நடவடிக்கை

    பயணிகள் வசதிக்காக மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் எனப்படும் தானியங்கி நடைமேடைகள் அமைக்க வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு இணை மந்திரி முருகன் ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    அதில்,மயிலாடுதுறையை சுற்றி கும்பகோணம், திருநாகேஸ்வரம் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டுத்தலங்கள் உள்ளன. குறிப்பாக மாயுராணந்த சுவாமி கோவில், ஸ்ரீ வாதனேஷ்வர் கோவில், கங்கைகொண்ட சோழபுரம், சூரியனார் கோவில், வைத்தீஸ்வரன் கோவில், ஆலங்குடி போன்ற வழிபாட்டுத் தலங்கள் இருப்பதால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான யாத்ரிகர்கள், பயணிகள் நாள்தோறும் ரெயில்கள் மூலம் மயிலாடுதுறை வழியாக இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

    குறிப்பாக பெண்கள், முதியவர்கள் பலர் வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக எஸ்கலேட்டர் எனப்படும் தானியங்கி நடைமேடைகள் இரண்டு அமைக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் மந்திரி முருகன் வலியுறுத்தியிருந்தார்.

    அந்தக் கடிதத்திற்கு பதிலளித்துள்ள ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ண்வ், தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் இரண்டு எஸ்கலேட்டர்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×