என் மலர்
நீங்கள் தேடியது "சொந்த ஊர் திரும்பும் மக்களால் நெரிசல்"
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- சிறப்பு பேருந்து இயக்கத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முடித்து சென்னை திரும்பும் மக்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பயணத் திட்டங்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்று பொது மக்களுக்கு போக்குவரத்துத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பொங்கல் பண்டிகையை முடித்து பயணிகள் சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பிச்செல்ல ஏதுவாக 17.01.2025, 18.01.2025, 19.01.2025, 20.01.2025 ஆகிய நான்கு நாட்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) லிமிடெட், விழுப்புரம் கோட்டம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
19.01.2025 அன்று பொதுமக்கள் அதிக அளவில் பயணிக்க வாய்ப்பு உள்ளதால் அன்றைய தினத்தில் கூட்ட நெரிசலை தவிர்த்திடும் பொருட்டு பொதுமக்கள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே 17.01.2025 மற்றும் 18.01.2025 ஆகிய தேதிகளில் திட்டமிட்டு இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ரெயில் மூலம் திண்டுக்கல் வந்து தேனி மாவட்டத்திற்கு பஸ்சில் செல்லும் பயணிகள் அதிகளவில் குவிந்ததால் பஸ்நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டது.
- பஸ்நிலையம் வந்த பயணிகள் கிராமங்களுக்கு செல்வதற்காக நீண்டநேரம் காத்திருந்து டவுன் பஸ்களில் சென்றனர்.
திண்டுக்கல்:
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனால் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தென்மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் ஊர் திரும்பி வருகின்றனர். பயணிகள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும் ரெயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதி வருகிறது. திண்டுக்கல் வழியாக தென்மாவட்டங்களுக்கு சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களுக்கு தென் மாவட்டங்களுக்கு ரெயில்கள் செல்கின்றன. இதில் பெரும்பாலான ரெயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. இதனால் முன்பதிவில்லாத பெட்டிகளில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
படிக்கட்டு மற்றும் கழிவறை அருகே அமர்ந்து பயணிக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் டிக்கெட்டு வாங்குவதற்காக ஏராளமானோர் நீண்டவரிசையில் காத்திருந்தனர்.
சென்னையில் இருந்து வெள்ளிக்கிழமை முதல் அதிகளவு பயணிகள் வெளியேறியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் ரெயில் மூலம் திண்டுக்கல் வந்து தேனி மாவட்டத்திற்கு பஸ்சில் செல்லும் பயணிகள் அதிகளவில் குவிந்ததால் பஸ்நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து கழகம் சார்பில் 200 சிறப்பு பஸ்கள் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
நேற்று கூட்டம் அதிகரித்த நிலையில் இன்று காலைமுதலே பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. வெளியூரில் இருந்து இரவு நேரத்தில் திண்டுக்கல் பஸ்நிலையம் வந்த பயணிகள் கிராமங்களுக்கு செல்வதற்காக நீண்டநேரம் காத்திருந்து டவுன் பஸ்களில் சென்றனர். இதனால் தீபாவளி பண்டிகை களைகட்ட தொடங்கியுள்ளது.