என் மலர்
நீங்கள் தேடியது "வேட்டி சேலை"
- பொங்கல் பண்டிகையின் போதும் ரேஷன் கடைகளில் விலையில்லா வேட்டி,சேலை வழங்கப்பட உள்ளது.
- விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு சுமார் 4 ஆயிரத்து 600 மெட்ரிக் டன் நூல் கொள்முதல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுகு விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்படுவது வழக்கம்
அந்த வகையில், 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போதும் ரேஷன் கடைகளில் விலையில்லா வேட்டி,சேலை வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு சுமார் 4 ஆயிரத்து 600 மெட்ரிக் டன் நூல் கொள்முதல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக நூல் கொள்முதல் செய்ய தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை டெண்டர் கோரியுள்ளது.
டெண்டர் இறுதியானதும் ஜூலை மாத இறுதியில் வேட்டி,சேலை உற்பத்தியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
- முதியோர் உதவித்தொகை 50பேருக்கு தீபாவளி விழா தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்றது.
- மாரிமுத்து எம்எல்ஏ, மன்றத்தலைவர் கவிதா பாண்டியன் ஆகியோர் விலையில்லா வேட்டி சேலை வழங்கினர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுக்காவில் முதியோர் உதவித்தொகை பெறும் 50பேருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி சேலை வழங்கும் விழா தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆர்டி.ஓ கீர்த்தனா மணி தலைமை வகித்தார்.
துணை கலெக்டர் கண்மணி முன்னிலை வகித்தார்.
தாசில்தார் மலர்கொடி வரவேற்றார்.
மாரிமுத்து எம்எல்ஏ, மன்றத்தலைவர் கவிதா பாண்டியன் ஆகியோர் விலையில்லா வேட்டி சேலை வழங்கினர்.
இதில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவகுமார், வி.ஏ.ஓ.க்கள் முருகானந்தம், தினேஷ்குமார், உயரதிகாரிகள், முதியோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.