என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "11 பவுன்"

    • நகையின் மதிப்பு சுமார் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
    • புகாரின்பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள வில்லுக்குறியை அடுத்த கொன்னக்குழிவிளையை சேர்ந்தவர் ஹைஜின்ஜோஸ் (வயது 40). இவர் வெளிநாட்டில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி சுஜா (38), நுள்ளிவிளையில் வீடுகளுக்கு உள் அலங்காரம் செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு அவர் வீட்டின் படுக்கை அறையில் தூங்கிக் கொண்டு இருந்தார்.

    அதிகாலை சுமார் 1.45 மணி அளவில் இந்த வீட்டு மாடியின் கதவை உடைத்து 2 பேர் வீட்டிற்குள் நுழைந்து உள்ளனர். அதில் ஒருவன் சுஜாவின் வாயை பொத்தி சத்தம் போட்டால் கொன்று விடுவதாக மிரட்டி உள்ளான்.

    அப்போது மற்றொருவன் சுஜா கழுத்தில் கிடந்த சுமார் 11 பவுன் தங்கத்தாலி சங்கிலியை பறித்துள்ளான். பின்னர் 2 பேரும் வீட்டின் பின்பக்க வாசல் வழியாக தப்பிச் சென்று விட்டனர்.

    இது குறித்து இரணியல் போலீசில் சுஜா புகார் செய்தார். அதில் நகையின் மதிப்பு சுமார் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் என குறிப்பிட்டுள்ளார். புகாரின்பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×