search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூபி மனோகரன் எம்.எல்.ஏ."

    • சீவலப்பேரி ஊராட்சியில் உள்ள எஸ்.என். பள்ளிவாசல் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது.
    • நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    களக்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சீவலப்பேரி ஊராட்சியில் உள்ள எஸ்.என். பள்ளிவாசல் கிராமத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை தமிழக காங்கிரஸ் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    இதில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணை தலைவர்கள் சந்திரசேகர், ராஜகோபால், சீவலப்பேரி ஊராட்சி தலைவர் அய்யம்மாள், துணை தலைவர் லலிதா, களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெக்ஸ், மத்திய வட்டார தலைவர் காளப்பெருமாள், நகராட்சி காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் வில்சன், துணை தலைவர் காமராஜ், மூலைக்கரைப்பட்டி நகர காங்கிரஸ் தலைவர் முத்துகிருஷ்ணன், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், கிழக்கு வட்டார தலைவர் சங்கரபாண்டி, கவுன்சிலர்கள் சங்கீதா ஆண்ட்ரூ, முத்துபாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தர், மாவட்ட பொதுச்செயலாளர் ஓபேத், முன்னாள் ஏ.ஐ.சி.சி. உறுப்பினர் வசந்தா, மகிளா காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் குளோரிந்தாள், மாநில இணை செயலாளர் கமலா, காங்கிரஸ் ஊடகத்துறை ஆறுமுகராஜ் மற்றும் நிர்வாகிகள் ஆர்.ஆர்.துரை, வில்சன், தங்கராஜ், வேலுச்சாமி, வேலம்மாள், ஶ்ரீ தேவி, முருகன், சுகுமார், தி.மு.க. நிர்வாகி செந்தில் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மறுகால்குறிச்சி செல்லும் சாலையில் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளியை சுற்றிலும் ஏராளமான விளைநிலங்கள் உள்ளன
    • ஊருக்குள் புகுந்துள்ள கரடி, அங்குள்ள பெரியகுளம் பகுதியில் தான் வலம் வருகிறது. அவ்வப்போது விளைநிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதம் செய்கிறது

    நெல்லை:

    தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. வுமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஊருக்குள் புகுந்த கரடி

    நாங்குநேரியில், மறுகால்குறிச்சி செல்லும் சாலையில் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளியை சுற்றிலும் ஏராளமான விளைநிலங்கள் உள்ளன. இவற்றில் வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்திருக்கிறார்கள்.

    இந்நிலையில் கடந்த நேற்று முன்தினம் இங்குள்ள விளை நிலங்களுக்குள் கரடி ஒன்று புகுந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த இந்த கரடி, திசை மாறியதால், ஊருக்குள் புகுந்துள்ளது தெரியவந்தது.

    ஊருக்குள் புகுந்த கரடி, விவசாயிகளை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. அச்சமடைந்த விவசாயிகள், தங்களது விளை நிலங்களை விட்டு உடனடியாக வெளியேறினார்கள். இதற்கிடையில் மறுகால்குறிச்சி சாலையில் அமைந்துள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை ஆய்வு செய்ய வந்த தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன், இந்த கரடியை நேரில் பார்த்தார்.

    எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

    இதற்கிடையே ஊருக்குள் புகுந்துள்ள கரடி, அங்குள்ள பெரியகுளம் பகுதியில் தான் வலம் வருகிறது. அவ்வப்போது விளைநிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதம் செய்கிறது. இதுபற்றி தகவல் அறிந்த வனத்துறையினர், ஊருக்குள் புகுந்த கரடியை உயிருடன் பிடிக்க அப்பகுதியில் கூண்டு வைத்துள்ளார்கள். கூண்டுக்குள், கரடிக்கு பிடித்த பழவகைகளை வைத்திருக்கிறார்கள்.

    நேற்று 2-வது நாளாகியும், அந்த கூண்டுக்குள் கரடி சிக்கவில்லை. ஊருக்குள் புகுந்துள்ள அந்த கரடியால் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்துல் ஏற்பட்டு இருப்பதால், வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, அந்தக் கரடியை உயிருடன் பிடித்து, காட்டுக்குள் விட வேண்டும் என்று, தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    மேலும் கரடி நடமாட்டம் உள்ள மறுகால்குறிச்சி செல்லும் சாலையில் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இருப்பதால், மாணவிகளின் நலன்கருதி, கரடியை பிடிக்கும் நடவடிக்கையை வனத்துறை யினர் வேகப்படுத்த வேண்டும். எனவும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

    • புதிய கட்டிடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
    • ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

    நெல்லை:

    மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வள்ளியூரில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் இன்று நேரில் சென்று மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் மருத்துவ சேவையை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி தலைவர் பார்வதி, மூலைக்கரைப்பட்டி காங்கிரஸ் நகர தலைவர் முத்துகிருஷ்ணன், வட்டார தலைவர்கள் நளன், ராமஜெயம், மூலைக்கரைப்பட்டி தி.மு.க. நகர தலைவர் முருகையா பாண்டியன், வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் ராஜீவ்காந்தி ஜோதிக்கு திசையன்விளை அருகே வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர்.

    திசையன்விளை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாளையொட்டி கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் ராஜீவ்காந்தி ஜோதிக்கு திசையன்விளை அருகே உள்ள மன்னார்புரம் சந்திப்பில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் நெல்லை கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் அமுதா கார்த்திகேயன், மாநில காங்கிரஸ் விவசாய அணி செயலாளர் விவேக் முருகன், மாவட்ட காங்கிரஸ் செயலாளர் மருதூர் மணிமாறன், மாவட்ட காங்கிரஸ் முன்னாள் துணைத்தலைவர் விஜயபெருமாள், திசையன்விளை நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராஜன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    • அடிக்கல் நாட்டு விழாவில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளையும் தன் சொந்த செலவில் செய்து வருகின்றார். அதனடிப்படையில் இன்று களக்காடு ஒன்றியம் ஏர்வாடி சிறப்பு நிலை பேரூராட்சி பகுதியில் உள்ள திருவரங்கநேரி வடக்கு புதிய அங்கன்வாடி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதிய அங்கன்வாடி கட்டிட பணிகளை தொடங்கி வைத்து அவர் சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் அம்பேத்கர் மிகச்சிறந்த அனுபவம் கொண்டவர்
    • ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர் அம்பேத்கர்.

    நெல்லை:

    தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ள தாவது:-

    பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்கிற பி.ஆர்.அம்பேத்கர், இன்றைய மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அம்பாவாதே என்னும் கிராமத்தில் பிறந்தவர். இந்திய விடுதலைக்குப் பிறகு, நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர்.

    உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர். பட்டியல் இன மக்களுக்கு என்று கழகம் ஒன்றைத் தொடங்கியவர், பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர் என்று, பல்வேறு போற்று தல்களுக்கு உரியவர் அம்பேத்கர்.

    பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் மிகச்சிறந்த அனுபவம் கொண்டவர். ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர்.

    இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது இவரது இறப்புக்குப் பின் 1990ல் இவருக்கு வழங்கப்பட்டது

    போற்றுதலுக்கு உரிய டாக்டர் அம்பேத்கரின் நினைவுநாள் இன்று (டிசம்பர் 6). இந்த நாளில், அவரரைப் போற்றி வணங்குவோம். இவ்வாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • ரூபி மனோகரன் சாரிடபிள் டிரஸ்ட், நெல்லை அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை பரிசோதனை மருத்துவ முகாம் நடத்தினர்.
    • கிராம மக்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.

    நெல்லை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களையும், உதவிகளையும் செய்து வருகின்றார்.

    அதனடிப்படையில் எம்.எல்.ஏ. ஏற்பாட்டின் பேரில் பாளையங்கோட்டை ஒன்றியம், பாளையங்கோட்டை வடக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட கீழநத்தம் பஞ்சாயத்தில் உள்ள கீழநத்தம் தெற்கூர், கீழநத்தம் மேலூர், வடக்கூர், ஆர்.சி.சர்ச் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கிராமங்கள் தோறும் மக்களை தேடி சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் டாக்டர் ரூபி மனோகரன் சாரிடபிள் டிரஸ்ட், நெல்லை அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை பரிசோதனை மருத்துவ முகாம் நடத்தினர். இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

    மேலும் எம்.எல்.ஏ.விடம் கிராம மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். அனைத்து கோரிக்கைகளை ஏற்று உரிய நடவடிக்கையும் எடுப்பதாக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார். கிராம மக்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    பின்னர் கிராம மக்கள் அனைவருக்கும் கூட்டாஞ்சோறு வழங்கி அவர்களோடு ஒன்றாக அமர்ந்து உணவு உண்டார்.நிகழ்ச்சியில் நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, கீழநத்தம் பஞ்சாயத்து தலைவர் அனுராதா ரவிமுருகன், மாநில மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் குளோரிந்தால், மாவட்ட துணை தலைவர் செல்லப்பாண்டி, பாளை வடக்கு,மேற்கு கிழக்கு,தெற்கு மற்றும் நாங்குநேரி வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள் கனகராஜ், கணேசன், சங்கரப் பாண்டியன், நளன், அம்புரோஸ் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் தெய்வாணை கனகராஜ், காங்கிரஸ் நிர்வாகிகள் ஜேம்ஸ்போர்டு, பெருமாள் தேவராஜ், நடராஜன், முத்துராமலிங்கம் முனிஸ்வரன், சாமுவேல் மற்றும் நெல்லை அகர்வால் கண் மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், கீழநத்தம் கிராம பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    ×