என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு வெடிப்பதை தவிர்க்கவும்"

    • முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது.
    • வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    ஊட்டி,

    முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இதன் கரையோரம் மசினகுடி ஊராட்சி உள்ளது.

    இங்கு வசிக்கும் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிப்பதால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று வனத்துறையினர் ஆண்டுதோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் மசினகுடி, மாவனல்லா, பொக்காபுரம், வாழைத்தோட்டம், சொக்கநல்லி கிராம மக்களுக்கு வனத்துறையினர் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    சிங்காரா வனச்சரகர் ஜான் பீட்டர் தலைமையிலான வனத்துறையினர் மசினகுடி ஊராட்சி அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர் ஊராட்சி தலைவர் மாதேவி மோகன், செயலர் கிரண் மற்றும் பணியாளர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி தொடங்கி வைத்தனர்.

    தொடர்ந்து மசினகுடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளுக்கு சென்றனர். அங்கு விடுதி உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

    மேலும் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசுகள் வெடிக்க கூடாது. ஒலிபெருக்கி மூலம் இசை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது. இதன் மூலம் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படும். அவை இடம் பெயர்ந்து ஊருக்குள் வர வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து பசுமை தீபாவளிைய கொண்டாட வேண்டும். மேலும் வனத்துறையின் உத்தரவை பின்பற்ற வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். 

    ×