என் மலர்
நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கிள் தகராறு"
- பேட்டை செக்கடி அருகே சிவபாலா மற்றும் அவரது நண்பர்கள் நள்ளிரவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
- அப்போது ஏற்பட்ட கைகலப்பில் சிவபாலா மற்றும் சந்தணகுமார் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
நெல்லை:
நெல்லையை அடுத்த பேட்டை செக்கடி அருகே அதே பகுதியை சேர்ந்த சிவபாலா மற்றும் அவரது நண்பர்கள் பூபதி, செல்வம், மாடசாமி உள்பட 6 பேர் நேற்று நள்ளிரவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக திருத்து சாலையில் அதே பகுதியை சேர்ந்த சந்தண குமார் மற்றும் அவரது நண்பர்கள் சொர்ணராஜ், சுந்தரம், இஸ்மாயில், பரமசிவம், மாரி செல்வம் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக 2 தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் சிவபாலா மற்றும் சந்தணகுமார் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுதொடர்பாக 2 தரப்பையும் சேர்ந்த 11 பேர் மீது பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.