என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பொன்னாடை அணிவித்தல்"
- வண்டி ஓட்டுனர்களுக்கு பொன்னாடை அணிவித்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர்.
- பயணிகளுக்கு இனிப்பு வழங்கி ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி கூறினர்.
தஞ்சாவூர்:
செங்கோட்டையில் இருந்து மதுரைக்கும், மயிலாடுதுறையில் இருந்து திண்டுக்கல்லுக்கும் இயங்கி வந்த இரு ரெயில்களை இணைத்து செங்கோட்டை- மயிலாடுதுறை ரெயிலாக, தீபாவளி நாளான நேற்று முதல் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.
அதன்படி தீபாவளி நாளான நேற்று மயிலாடு துறை- செங்கோட்டை ரெயில் சேவை (வண்டி எண் 16847) தொடங்கியது.
மறுமார்க்கத்தில் செங்கோட்டை - மயிலாடு துறை (வண்டி எண் 16848) ரெயில் சேவை இன்று முதல் தொடங்கியது.
இந்த ரெயில் தினமும் மயிலாடுதுறையில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு குத்தாலம், கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருச்சி, மதுரை ,விருதுநகர், ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி வழியாக செங்கோட்டைக்கு இரவு 9.30 மணிக்கு சென்றடைகிறது.
இதே போல் தினமும் செங்கோட்டையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் ரயில் மயிலாடுதுறைக்கு மாலை 5.10 மணிக்கு சென்று அடைகிறது.
இந்த நிலையில் தீபாவளி நாளான நேற்று முதல் தொடங்கிய இந்த ரெயில் சேவையானது மயிலாடுதுறையில் புறப்பட்டு மதியம் 12.45 தஞ்சை ரயில் நிலையத்துக்கு வந்து ஓரிரு நிமிடம் நின்றது.
அப்போது ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கத்தி ன் தலைவர் அய்யனாபுரம் நடராஜன், செயலாளர் வக்கீல் ஜீவக்குமார், நிர்வாகிகள் வழக்கறிஞர் உமர் முக்தார், பேராசிரியர்கள் திருமேனி, செல்வ கணேசன், ஹாஜா மொகைதீன் தலைமையில் ரெயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் வண்டி ஓட்டுன ர்களுக்கு பொன்னாடை அணிவித்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர். ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி கூறினர்.
இது குறித்து சங்க செயலாளர் வக்கீல் ஜீவக்குமார் கூறும்போது,
கோவிட் 19 காலத்திற்கு முன்பு தஞ்சாவூர் தடத்தில் இயங்கிய பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் இவற்றை திரும்ப இயக்க கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை பிரிவில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தோம்.
தொடர்ந்து அண்மையில் பல ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முன்பு மயிலாடுதுறை- திண்டுக்கல் தடத்தில் இயக்கிய ரெயில் செங்கோட்டை - மயிலாடுதுறை - செங்கோட்டை தடத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்