என் மலர்
நீங்கள் தேடியது "கடிதம் எழுதி வைத்து விட்டு"
- நேற்று முன் தினம் மதியம் சுகுணா வீட்டில் டி.வி.பார்த்துக் கொண்டிருந்ததை அவரது அக்கா மாலதி பார்த்துள்ளார்.
- இதுகுறித்து சுகுணாவின் அக்கா மாலதி அளித்த புகாரின் பேரில், பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான சுகுணாவை தேடி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள வீரணம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுகுணா (23). பி.எஸ்.சி., படித்துள்ள இவர், பெருந்துறை அருகே உள்ள சுள்ளிபாளையத்தில் உள்ள மகாலிங்கம் என்பவரிடம் கடந்த 6 மாதங்களாக ஆடிட்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.
சுகுணாவுக்கு கடந்த 10 நாட்களாக காது வலி இருந்து வந்துள்ளது. இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன் தினம் மதியம் சுகுணா வீட்டில் டி.வி.பார்த்துக் கொண்டிருந்ததை அவரது அக்கா மாலதி பார்த்துள்ளார்.
அதன்பின் சுகுணாவை காணவில்லை. அக்கம்பக்கம், உறவினர் வீடுகள் என எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
வீட்டில் உள்ளவர்கள் டி.வி.ஸ்டேண்டில் பார்த்தபோது ஒரு கடிதம் இருந்தது. அதில், தனக்கு காதுவலி அதிகமாக இருப்பதால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும், தனது மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை என்றும் சுகுணா எழுதி வைத்துச் சென்ற கடிதம் கிடைத்துள்ளது.
இதுகுறித்து சுகுணாவின் அக்கா மாலதி அளித்த புகாரின் பேரில், பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான சுகுணாவை தேடி வருகின்றனர்.