என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முதல்வர் பங்கேற்பு"
- தேவர் ஜெயந்தி விழாவில் முதல்வர், அமைச்சர்கள், சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர்.
- இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்மண்டல ஐ.ஜி. ஆய்வு செய்தார்.
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் வருகிற 30-ந் தேதி சுதந்திர போராட்டத் தியாகி, முன்னாள் எம்.பி. முத்துராமலிங்கதேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குருபூஜை விழா அரசு விழாவாக நடைபெறுகிறது.
இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர். பசும்பொன்னில் இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதை தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் ஆய்வு செய்தனர்.
முதல்-அமைச்சர் வரும் வழித்தடத்தில் அமைக்கப்பட்டு வரும் உயர் கண்காணிப்பு கோபுரங்கள், பாதுகாப்பு தடுப்புகள், கமுதி மற்றும் பசும்பொன் பகுதிகளில் 92 நிரந்தர கண்காணிப்பு காமிராக்கள், தற்காலிக சோதனை சாவடிகள் ஆகியவற்றை பார்வையிட்டதுடன், தேவர் நினைவாலய பொறுப்பாளர்கள் காந்தி மீனாள், பழனி, தங்கவேல் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர் பாலாஜி உட்பட காவல் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.