என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமான நிலையத்தில் வீடியோ"

    • திருச்சி விமான நிலையத்தில் அத்துமீறி நுழைந்து செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் கைது
    • டீக்கடைக்கு முன்பாக வெடி வெடித்ததால் எழுந்த தகராறு தொடர்பாக எடமலைப்பட்டிப்புதூர் காவல்துறையினர் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்

    திருச்சி:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்திற்குள் செல்போன் மூலம் வீடியோ மற்றும் போட்டோ எடுத்த நான்கு பேரிடம் அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.

    இதில் எழுந்த தகராறில் நான்கு பேர் மீது ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல் ஆட்டோ டிரைவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட பத்துக்கும் மேற்பட்டோர் மீது கண்டோன்மென்ட் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    மேலும் எடமலைப்பட்டிப்புதூர் பகுதியில் உள்ள டீக்கடைக்கு முன்பாக வெடி வெடித்ததால் எழுந்த தகராறு தொடர்பாக எடமலைப்பட்டிப்புதூர் காவல்துறையினர் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதேபோல் பல்வேறு நிகழ்வுகளில் மொத்தம் 25-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை தண்ணீர் தொட்டி அருகே முகம்மது ரியாஸ் (வயது 23) என்பவரை கத்தியை காட்டி மிரட்டிய தர்மநாதபுரம் புனித அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த தாமஸ் அந்தோணி (22) என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர்.

    அதேபோல் தில்லை நகர் பிரதான சாலையில் சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்த பாஸ்கர் (56) என்பவரிடம் தென்னூர் வாமடம் சப்பாணி கோவில் தெருவை சேர்ந்த அரவிந்த் (28) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக கைது செய்யப்பட்டார். மேலும் கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து கத்தி மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×