என் மலர்
நீங்கள் தேடியது "சிவகாசி யூனியன்"
- சிவகாசி யூனியனில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
- இந்த ஆய்வின்போது திட்ட இயக்குநர் திலகவதி, உதவி செயற்பொறியாளர் பாண்டுரங்கன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றிய த்திற்குட்பட்ட ஆனையூர், செங்கமலநாச்சியார்புரம், நமஸ்கரித்தான்பட்டி, மங்களம், புதுக்கோட்டை, செவலூர் ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆனையூர் ஊராட்சியில் உள்ள சமத்து வபுரம் பகுதிகளில் புதுப்பிக்க ப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்குள்ள சமு தாயக்கூடம், அங்கன்வாடி மையத்தையும், செங்கம லநாச்சி யார்புரம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.22 லட்சம் மதிப்பில் ஊருணி சீரமை க்கப்பட்டு வரும் பணிகளையும், அதே பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.12 லட்சம் மதிப்பில் அமை க்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலை பணிக ளையும் கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து மங்களம் ஊராட்சி மேட்டுப்பட்டியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.49 லட்சம் மதிப்பில் சிறிய பாலம் கட்டுப்பட்டு வரும் பணிகளையும், புதுக்கோட்டை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.24 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செவலூர் ஊராட்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் ரூ.311 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டப்பட்டு வரும் பணிகளையும் கலெக்டர் மேகநாதரெட்டி பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது திட்ட இயக்குநர் திலகவதி, உதவி செயற்பொறியாளர் பாண்டுரங்கன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தனர்.