என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 நாட்டு துப்பாக்கிகளை கைப்பற்றி"

    • வன உயிரினங்களை சட்ட விரோதமாக நாட்டுத் துப்பாக்கி மூலம் வேட்டையாடுதலால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் அபாயம் குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனக்கோட்டம், கேர்மாளம் வனச் சரகத்தில் வனச்சரக அலுவலர் தினேஷ் தலைமையில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு வனம் மற்றும் வன உயிரினங்களின் முக்கியத்துவம் குறித்து கேர்மாளம் மலை கிராமங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து கொண்டாடப்பட்டது.

    அதன் ஒரு பகுதியாக வன உயிரினங்களை சட்ட விரோதமாக நாட்டுத் துப்பாக்கி மூலம் வேட்டையாடுதலால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் அபாயம் குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும் சட்ட விரோதமாக நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்தால் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் நேற்று கேர்மாளம் வனச் சரகத்திற்கு உட்பட்ட கானக்கரை கிராம பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அங்குள்ள அங்கன்வாடி வளாகத்திற்கு அருகே இரண்டு நாட்டுத் துப்பாக்கிள் கிடந்துள்ளது அதை கைப்பற்றிய வனத்துறை சட்ட நடைமுறைகளின் படி கைப்பற்றிய நாட்டுத் துப்பாக்கிகள் 2-ம் ஆசனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×