என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடம் ஆக்கிரமிப்பு"

    • 2017 ம் ஆண்டு 96 குடும்பங்களுக்கு குடிமனைபட்டா வழங்கப்பட்டது.
    • இதுவரை இடம் அளந்து ஒப்படைக்கப்படவில்லை.

    உடுமலை :

    அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் உடுமலை வருவாய் கோட்டாட்சியரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கம் பகுதியில் கடந்த 2017 ம் ஆண்டு 96 குடும்பங்களுக்கு குடிமனைபட்டா வழங்கப்பட்டது.

    ஆனால் இதுவரை இடம் அளந்து ஒப்படைக்கப்படவில்லை. தற்போது இந்த இடம் தனியார் நபர் ஆக்கிரமிப்பில் உள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு 96 குடும்பங்களுக்கு இடத்தை பிரித்து வழங்க வேண்டும். பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என அதில் கூறியுள்ளனர்.

    • பள்ளி மேலாண்மை குழுவினர் புகார்
    • நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி நேத்தாஜிநகர் வடக்கு பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளிக்கு சொந்தமாக உள்ள இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்து அங்கு வீடுகள் கட்ட முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனை தடுத்து மீண்டும் அந்த இடத்தை பள்ளிக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று வாணியம்பாடிக்கு வந்த கலெக்டர் அமர்குஷ்வாஹாவிடம், நகரமன்ற உறுப்பினர் ஹாஜியார் ஜகீர் அகமது மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர், பொதுமக்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

    புகாரை பெற்றுக் கொண்ட கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    ×