என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதியம் 11.30 மணிவரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி"

    • காலை 11 மணிக்கு நிறுத்தப்பட்டு உச்சிகாலபூஜை 12 மணிக்கும், அதனைதொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெறும்.மதியம் 2.45 மணிக்கு பராசக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சிக்கு பின்பு சன்னதி அடைக்கப்படும்.
    • சூரசம்ஹார நாளில் மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது என்று கோவில் இணைஆணையர் தெரிவித்துள்ளார்.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணிசாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 25-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், 4.30 மணிக்கு விழா பூஜையும் நடைபெறும்.

    அனைத்து கட்டண சீட்டுகளும் காலை 11 மணிக்கு நிறுத்தப்பட்டு உச்சிகாலபூஜை 12 மணிக்கும், அதனைதொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெறும்.மதியம் 2.45 மணிக்கு பராசக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சிக்கு பின்பு சன்னதி அடைக்கப்படும்.

    எனவே படிப்பாதையில் வரும் பக்தர்கள் அன்று மதியம் 11.30 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். காலை 10 மணி முதல் மின்இழுவை ரெயில், ரோப்கார் இயங்காது. 4 கிரிவீதிகளிலும் சூரசம்ஹாரம் முடிந்து சின்னக்குமாரர் மலைக்கோவிலுக்கு சென்றபின்பு சம்ரோட்சணபூஜை நடைபெறும். அதனை தொடர்ந்து ராக்காலபூஜை நடைபெறும். சூரசம்ஹார நாளில் மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது என்று கோவில் இணைஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

    ×