என் மலர்
நீங்கள் தேடியது "என்.ஆர்.தனபாலன்"
- மதுரை நாடார் மகாஜன சங்க தேர்தலில் என்.ஆர்.தனபாலன் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
- எஸ்.வி.கணேசன் தலைமையில் பல்வேறு நாடார் சங்கத்தினரை சந்தித்து வாக்கு சேகரித்தனர்.
சுரண்டை:
மதுரை நாடார் மகாஜன சங்க தேர்தல் வருகிற நவம்பர் 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுரை வெள்ளச்சாமி நாடார் கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது. இதில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். மற்ற பதவிகளுக்கான வேட்பாளர்கள் அவரது தலைமையில் மூன்று பனைமரம் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் என்.ஆர்.தனபாலன் தலைமையில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் ஆதரித்து, தென்காசி மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவர் சுரண்டை எஸ்.வி.கணேசன் தலைமையில், பாண்டியாபுரம், கடையாலுருட்டி, சேர்ந்தமரம், கள்ளம்புளி ஆகிய கிராமங்களுக்கு சென்று பல்வேறு நாடார் சங்கத்தினரை சந்தித்து 3 பனை மரம் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்.
தென்காசி மாவட்டத்தில் நாடார் மகாஜன சங்கம் மூலம் நர்சிங் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி அமைக்கப்படும், மத்திய, மாநில அரசு பணிகளில் சேர்வதற்கான பயிற்சி அளிக்கப்படும், பின்தங்கிய மகளிர் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த சிறு தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு, தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் வேட்பாளர்கள் கே.வி.கண்ணன், சேர்மராஜ், ஆனந்தராஜ், சின்னத்தம்பி மற்றும் நாடார் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.