என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜி.கே. நாகராஜ் குற்றச்சாட்டு"

    • தி.மு.க., பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து பொதுமக்களை நம்ப வைத்துள்ளது.
    • தி.மு.க., மக்கள் நலனுக்காக இதுவரை எதுவும் செய்யவில்லை.

    ஊட்டி,

    தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிப்பதாக கூறி, தி.மு.க அரசுக்கு எதிராக நீலகிரி பா.ஜனதா கட்சி சார்பில் ஊட்டி ஏ.டி.சி திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். இதில் விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் தமிழை வளர்ப்பதாக கூறி தி.மு.க., நாடகமாடுகிறது. தி.மு.க., பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து பொதுமக்களை நம்ப வைத்துள்ளது. தமிழகத்தில் திராவிடத்தால் தான் தமிழை வளர்க்க முடியும் எனக் கூறி வரும் தி.மு.க., மக்கள் நலனுக்காக இதுவரை எதுவும் செய்யவில்லை.

    ஆன்மிக வழியில் மட்டுமே தமிழை காக்க முடியும். அதற்கு பா.ஜனதா கட்சி மட்டுமே போராடி வருகிறது.இல்லாத ஒன்றை இருக்கும் படி செய்வதே தி.மு.கவின் வேலை. எப்போது எல்லாம் தி.மு.க ஊழல் செய்கிறதோ அப்போது எல்லாம் மொழி பிரச்சனையை தி.மு.க கையில் எடுக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்பாட்டத்தில் செயற்குழு குழு உறுப்பினர்கள் போஜராஜன், சபிதா போஜன்,ராமன்,சுமதி குமார், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஈஸ்வரன், பரமேஸ்வரன், ஜே.ஜே. குமார், நளினி மாவட்ட பொருளாளர் தருமன், மாவட்ட செயலாளர் அருண்குமார், மண்டல தலைவர் பிரவீன், பொதுச்செயலாளர் சுரேஷ்குமார், ராஜேந்திரன், நகர துணை தலைவர் சுதாகர், ஹரி கிஷன், மணி ஸ்மூத்லி, நகர மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்,

    ×