என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்களுக்கு அனுமதியில்லை"

    • கோவை மருதமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது
    • கோவில் வாகனங்களில் செல்வதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

    வடவள்ளி,

    கோவை மருதமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது. 4-ம் நாளான இன்று மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுப்பிரமணியருக்கு மூல மந்திரம் யாகம் வளர்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து முன் மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி தங்க கவசத்தில் மயில் வாகனத்திலும், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி தங்க யானை வாகனத்திலும் காட்சியளித்தார்.

    இன்று வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நாளை மறுநாள் 30-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) சூரசம்ஹாரம் நிகழ்ச்சி மற்றும் 31-ந் தேதி(திங்கட்கிழமை) காலை திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் திங்கள்கிழமை மதியம் 12 மணி வரை இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மலைக்கோவிலுக்கு செல்ல அனமதி கிடையாது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோவில் வாகனத்தில் மட்டும் மலைக்கோவிலுக்கு வர வேண்டும் என்று பரிசீலனை செய்யப்பட்டு உள்ளது. முக்கிய நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் மட்டும் நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கபப்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பாகவும், வடவள்ளி காவல்துறை சார்பில் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

    ×