என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜி.கே.வாசன் கோவையில் பேட்டி"
- கோவையில் நடந்த சிலிண்டர் விபத்து குறித்து பல கோணங்களில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
- பொதுமக்கள் அச்சத்தில் இருக்கும்போது உண்மையை வெளிக்கொண்டு வந்து தவறானவர்களை தண்டிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கோவை,
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கோவையில் நடந்த சிலிண்டர் விபத்து குறித்து பல கோணங்களில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் சந்தேகமும் வலுத்து கொண்டே போகிறது. எனவே என்.ஐ.ஏ. விசாரணை இதன் உண்மை நிலையை வெளிப்படுத்தும் என நம்புகிறேன்.
இது போன்ற தவறான நிகழ்வுகளுக்கு முழுவதுமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களுக்கு என்னென்ன தொடர்பு இருக்கிறது. அவர்களின் பின்னணி நோக்கம் என்ன? ஏன் இது போன்ற தேசிய விரோத செயல்களில் ஈடுபட துணிந்தார்கள் என்பதெற்கெல்லாம் இன்னும் பதில் இல்லை.
பொதுமக்கள் அச்சத்தில் இருக்கும்போது உண்மையை வெளிக்கொண்டு வந்து தவறானவர்களை தண்டிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மக்களுடைய அச்சத்தை போக்கக்கூடிய நிலையை அரசு உறுதியுடன் எடுத்து ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். மேலும் 31-ந் தேதி பந்த் என்று அறிவித்துள்ள பா.ஜ.க அறிவிப்பானது கோவையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மட்டும் தான் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.