என் மலர்
நீங்கள் தேடியது "Monitoring at 12 testing booths"
- ஆலப்புழாவில் உள்ள பண்ணையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுமார் 1, 500 வாத்துகள் திடீரென உயிரிழந்தன.
- 12 சோதனைச் சாவடிகளில் கால்நடை டாக்டர்கள் தலைமையில் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோவை,
கேரள மாநிலம், ஆலப்புழாவில் உள்ள பண்ணையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுமார் 1, 500 வாத்துகள் திடீரென உயிரிழந்தன. வாத்துகளுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் பறவை காய்ச்சல் இருந்தது உறுதியானது.
இதனால், அங்கு மேலும் 25 ஆயிரம் கோழிகளை அழிக்க அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், கோவை- கேரள எல்லைகளான வாளையாறு, வேலந்தாவளம், முள்ளி, ஆனைக்கட்டி, பட்டிசாலை, தோலம்பாளையம் உள்பட 12 சோதனைச் சாவடிகளில் கால்நடை டாக்டர்கள் தலைமையில் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், கோவையில் உள்ள கோழிப்பண்னைகளிலும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கேரளாவிற்கு கோழி, முட்டை, தீவனங்கள் ஏற்றிச்சென்று திரும்ப வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி அடித்து தொற்று நீக்கம் செய்யப்ப டுவதோடு, வாகன எண்கள், செல்லும் முகவரி பதிவு செய்யப்பட்டு வருகிறது.
பொதுவாக மாதம் தோறும் பறவைகளின் எச்சங்கள் சேகரிக்கப்பட்டு 200 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது. அதில் தற்போது வரை மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை என கால்நடை பராமரிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.