என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சமூக ஊடகங்கள்"
- குழந்தைகளை விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளங்கள், டென்னிஸ் மைதானங்களில் பார்க்க விரும்புகிறேன்.
- எந்த வயது குழந்தைகளுக்கு தடை விதிப்பது என்பது குறித்து வயது சரிபார்ப்பு சோதனை விரைவில் தொடங்கப்படும்.
ஆஸ்திரேலியா:
குழந்தைகள் தற்போது செல்போன், சமூக ஊடகங்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறியதாவது:-
குழந்தைகளை அவர்களின் செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் இருந்து விலக்கி விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளங்கள், டென்னிஸ் மைதானங்களில் பார்க்க விரும்புகிறேன்.
அவர்கள் உண்மையான நபர்களுடன் உண்மையான அனுபவங்களைப் பெற வேண்டும் என்று விரும்புகிறோம். ஏனென்றால் சில சமூக ஊடகங்கள் தீங்கு விளைவிப்பதாக இருக்கிறது.
சமூக ஊடகங்களில் உள்ள தகவல்கள் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தில் தாக்கங்கள், அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இருப்பது கவலை அளிக்கிறது.
எனவே குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டத்தை இந்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. எந்த வயது குழந்தைகளுக்கு தடை விதிப்பது என்பது குறித்து வயது சரிபார்ப்பு சோதனை விரைவில் தொடங்கப்படும்.
இது உலகளாவிய பிரச்சனை. இதில் தீர்வு காண உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் முயற்சிகளை எடுத்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
- பயங்கரவாத அச்சுறுத்தல் வளர்ந்து வருகிறது.
- பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு பொருளாதார தடைகளை விதிக்கிறது.
புதுடெல்லி :
டெல்லியில் முதன் முதலாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத தடுப்பு குழுவின் சிறப்பு கூட்டம் 2 நாட்களாக நடந்து வந்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின் 2-வது நாளான நேற்று மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 20 ஆண்டுகளில் புதிய மற்றும் வளர்ந்து வருகிற தொழில்நுட்பங்கள், மெய்நிகர் தனியார் நெட்வொர்க்குகள், மறைகுறையாக்கப்பட்ட தகவல் தொடர்பு சேவைகள், மெய்நிகர் நாணயங்கள் வரை தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், உலகம் செயல்படுகிற விதத்தை மாற்றி உள்ளன. இவை பரந்த எதிர்காலத்துக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தை பொருளாதார மற்றும் சமூக நன்மைகளின் வரிசையாக வழங்குகின்றன.
இந்த தொழில்நுட்பங்கள் அரசுகள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு புதிய சவால்களை உருவாக்கியுள்ளன.
சமீப காலங்களில் பயங்கரவாத குழுக்கள், அவர்களது சித்தாந்தத்தை ஏற்று பின்தொடர்கிறவர்கள் இந்த தொழில்நுட்பங்களை அணுகுவதன் மூலம் தங்கள் திறன்களை கணிசமாக மேம்படுத்தியுள்ளனர்,
இணையதளங்கள் மற்றும் சமூக ஊடக தளங்கள் பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் சக்தி வாய்ந்த கருவிகளாக மாறி வருகின்றன. அவற்றின் வாயிலாக அவர்கள் தங்கள் கொள்கை பிரசாரங்களை மேற்கொள்கிறார்கள்.
இன்றைக்கு அரசுகளுக்கு ஏற்கனவே உள்ள கவலைகளுடன் மற்றொரு கவலையாக புதிதாக சேர்ந்திருப்பது, பயங்கரவாத குழுக்கள் மற்றும் அமைப்பு ரீதியிலான குற்ற நெட்வொர்க்குகள் ஆளில்லாத வான் அமைப்புகளை (டிரோன்களை) பயன்படுத்துவதாகும்.
இந்த டிரோன்களை ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் வினியோகிப்பதற்கும், குறி வைத்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு பயங்கரவாத குழுக்கள் பயன்படுத்துவதும் உடனடி ஆபத்தாக மாறி இருக்கின்றன.
எனவே, உலகமெங்கும் அவை பாதுகாப்பு முகமைகளுக்கு ஒரு சவாலாக மாறி உள்ளன. மூல உபாய, உள்கட்டமைப்பு மற்றும் வணிக சொத்துக்களுக்கு எதிராக பயங்கரவாத நோக்கங்களுக்காக ஆயுதம் ஏந்திய டிரோன்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள், உறுப்பு நாடுகளின் தீவிர கவனத்தை ஈர்க்கின்றன.
பயங்கரவாதம் என்பது மனித குலத்துக்கு எதிரான மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், அச்சுறுத்தலை எதிர்த்துப்போராடுவதற்கு, முக்கிய கட்டமைப்பை உருவாக்கி உள்ளது. பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு பொருளாதார தடைகளை விதிக்கிறது.
பயங்கரவாதத்தை அரசு நிதியுதவி நிறுவனமாக மாற்றிய நாடுகளுக்கு எதிராக இதன்மூலம் ஐ.நா. வலிமையாக செயல்பட்டுள்ளது.
இதற்கு மத்தியிலும், ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் பயங்கரவாத அச்சுறுத்தல் வளர்ந்து வருகிறது. விரிவடைந்து வருகிறது.
எனவே புதிய தொழில்நுட்பங்கள் பயங்கரவாத குழுக்களால் தவறான நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படாமல் தடுப்பது குறித்து பயங்கரவாத தடுப்பு குழு விவாதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்