என் மலர்
நீங்கள் தேடியது "19.8 மி.மீ."
- திற்பரப்பில் குளிக்க தடை நீடிப்பு
- சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
நாகர்கோவில்:
வடகிழக்கு பருவமழை நாளை முதல் தீவிரமடையும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இந்த நிலையில் மாவட் டம் முழுவதும் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது.இதனால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அசம்பு ரோடு கோட்டார் சாலைகளில் சாக்கடை நீருடன் மழை நீரும் ஆறாக ஓடியது.
கொட்டாரம், மயிலாடி, சாமிதோப்பு, தக்கலை, ஆரல்வாய்மொழி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. நாகர்கோவிலில் அதிகபட்ச மாக 19.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருங் சாணி, சிற்றார் அணை பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணை களின் நீர்மட் டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். அணைக்கு வரக்கூடிய தண்ணீருக் கேற்ப அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றவும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
பேச்சிப்பாறை அணை யில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது. இதனால் குழித்துறை ஆறு, கோதை ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியை தண்ணீர் மூழ்கடித்து செல்கிறது. இதையடுத்து திற்பரப்பு அருவியில் விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமையான இன்று அருவியல் குளிப்ப தற்கு ஏராளமான சுற்று லாப் பயணிகள் வந்தி ருந்தனர். அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட தையடுத்து அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பேச்சிபாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 42.29 அடியாக உள்ளது. அணைக்கு 897 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 383 கனஅடி தண்ணீர் மதகுகள் வழியா கவும் 2014 கனஅடி தண்ணீர் உபரிநீராகவும் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.50 அடியாக உள்ளது. அணைக்கு 479 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 800 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.
சிற்றார்-1 அணை நீர்மட்டம் 12.33 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 12.43 அடியாகவும் உள்ளது.
4 அணைகளின் நீர்மட்ட மும் நிரம்பி வருவதையடுத்து நான்கு அணைகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. பொய்கை அணை நீர்மட் டம் 16.10 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 38.30 அடியாகவும், முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.40 அடியாகவும் உள்ளது.