என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்டன கோஷம்"

    • பண்ருட்டி அருகே பா.ஜ.க. தலைவர் உருவபொம்மையை தி.மு.க.வினர் எரித்தனர்.
    • அண்ணாமலையை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினார்கள்.

    கடலூர்:

    கடலூரில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதையும், வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சரை ஒருமையில் பேசியதை கண்டித்தும் பண்ருட்டி அருகே கண்டரக்கோட்டையில் அண்ணாகிராம ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் சாம்பசிவம் தலைமையில் தி.மு.க.வினர் ஏராளமானோர் திரண்டனர். உருவ பொம்மை எரிப்பதற்கு அவர்கள் ஊர்வலமாக சென்னை சாலையில் வந்தனர்.

    இதையடுத்து அண்ணாமலை உருவ பொம்மையை தி.மு.க.வினர் தீ வைத்து எரித்தனர். அப்போது அங்கிருந்த பெண்கள் மற்றும் தி.மு.க.வினர் உருவ பொம்மையை காலணியால் தாக்கி தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். மேலும் அண்ணாமலையை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினார்கள். இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் எரிந்து கொண்டிருந்த உருவ பொம்மையை தண்ணீர் ஊற்றி அணைத்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அந்தபகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கண்டன பதாகைகள் ஏந்திய படி முழக்கம்.
    • சபாநாயகரின் இருக்கையை நோக்கி வந்து கோஷம் எழுப்பினார்கள்.

    சென்னை:

    சட்டசபையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டு சென்றதும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கண்டன பதாகைகள் ஏந்திய படி முழக்கமிட்டனர்.

    அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டபடி சபாநாயகரின் இருக்கையை நோக்கி வந்து கோஷம் எழுப்பினார்கள்.

    அதற்கு சபாநாயகர் அனுமதிக்கவில்லை. சபாநாயகர் அப்பாவு, அவர்களை இருக்கையில் அமருமாறு திரும்பத் திரும்ப சொன்னார். ஆனால் அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் இருக்கையில் அமராமல் தொடர்ந்து கோஷம் எழுப்பினார்கள்.

    அப்போது சபாநாயகர் கூறுகையில், கலவரம் செய்யும் நோக்குடன் நீங்கள் வந்திருக்கிறீர்கள். திட்டம் போட்டு குந்தகம் விளை விக்கும் வகையில் செயல் படுகிறீர்கள். இதை அனுமதிக்க முடியாது. நீங்கள் இருக்கைக்கு சென்று அமராவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ஆனாலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருக்கைக்கு செல்லாமல் தொடர்ந்து கோஷம் எழுப்பினார்கள். இதனால் சபாநாயகர் அப்பாவு, அவர்களை வெளியேற்றுமாறு சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.


    இதைத்தொடர்ந்து சபை காவலர்கள் உள்ளே வந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வலுக்கட்டாயமாக தூக்கி வெளியேற்றினார்கள். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

    இதனால் சட்டசபையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் உருவானது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்ட பிறகு சபாநாயகர் அப்பாவு கவர்னர் உரையை தமிழில் வாசித்தார்.

    ×