search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்று சூரசம்ஹார விழா"

    • சென்னிமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், திண்டல் மலையில் உள்ள வேலாயுத சுவாமி கோவில்களில் கந்த சஷ்டி விழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது.
    • விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா இன்று மாலை நடைபெறுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், திண்டல் மலையில் உள்ள வேலாயுத சுவாமி கோவில்களில் கந்த சஷ்டி விழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது.

    இதில் 2 கோவில்களிலும் தினந்தோறும் சிறப்பு யாகம் மூலவருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெற்று வருகிறது. சென்னிமலையில் நேற்று வினை தீர்க்கும் வேலவன் என்ற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது.

    இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா இன்று மாலை நடைபெறுகிறது. இதற்காக சென்னிமலை சுப்பிரமணியசாமி கோவிலில் இன்று மாலை 4 மணிக்கு மேல் மலைக்கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகளை படிக்கட்டுகள் வழியாக அடிவாரத்திற்கு அழைத்து வரப்பட்டது.

    அதை தொடர்ந்து இரவு 7 மணிக்கு மேல் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது நான்கு ராஜ வீதிகளிலும் முருக பெருமான் பல்வேறு வாகனங்களில் சென்று சூரர்களை வதம் செய்கிறார்.

    இறுதியில் வான வேடிக்கைகள் முழங்க முருகர் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இதேபோல் திண்டல் வேலாயுத சாமி கோவிலில் இன்று மாலை 6 மணிக்கு மேல் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறநிலை யத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 

    ×