என் மலர்
நீங்கள் தேடியது "நூலகம் திறப்பு"
- சோழசிராமணி மெயின் ரோட்டில் பகுதிநேர நூலகம் திறப்பு விழா நடைபெற்றது.
- கபிலர்மலை ஒன்றிய குழு உறுப்பினர் வளர்மதி, சோழசிராமணி ஊராட்சி தலைவர் கோகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் சோழசிராமணி மெயின் ரோட்டில் பகுதிநேர நூலகம் திறப்பு விழா நடைபெற்றது.
முன்னாள் ஊராட்சித் தலைவர் தளபதி சுப்பிர மணியம் தலைமை வகித்தார். சித்தளந்தூர் கிளை நூலகர் சிவராமன் வரவேற்றார். கபிலர்மலை ஒன்றிய குழு உறுப்பினர் வளர்மதி, சோழசிராமணி ஊராட்சி தலைவர் கோகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கபிலர் மலை யூனியன் சேர்மன் ரவி, நாமக்கல் மாவட்ட நூலக அலுவலர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு நூலகத்தை திறந்து வைத்து சிறப்புரை யாற்றினர். கண்ணன், ரங்கசாமி, சந்திரசேகரன், முத்துசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் தனசேகரன் நன்றி கூறினார்.
- ரூ.3.78 லட்சம் மதிப்பில் பழுதுபார்த்தல் பணி நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நெல்வாய் ஊராட்சி - சின்ன தென்னல் கிராமத்தில் 2019-2020ஆம் நிதியாண்டின், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் மற்றும், நெல்வாய் ஊராட்சி - எஸ்.கொளத்தூர் கிராமத்தில் 2021-2022ஆம் நிதியாண்டின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், ரூ.3,78 லட்சம் மதிப்பீட்டில் பழுதுபார்த்தல் பணி மேற்கொள்ளப்பட்ட நூலக கட்டிடத்தினையும், நெமிலி ஒன்றிய குழுதலைவர் பெ.வடிவேலு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் வேதமுத்து, நெல்வாய் ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகம்மாள் சுப்பிரமணி, ஒன்றிய குழு உறுப்பினர் சங்கீதா கதிரவன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தனலட்சுமி தனசேகர், ஊராட்சி செயலாளர் செந்தில்குமார், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி பணியாளர்கள், கிராம பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
- தமிழ் வாழ வேண்டும் என்றால் 9 கோடி தமிழர்களும் தமிழில் பேச வேண்டும்.
- தமிழ் ஆட்சி மொழியாக என்றென்றும் இருக்க வேண்டும்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடந்த நூலக திறப்பு விழாவில் முன்னாள் மந்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-
தமிழ் வாழ வேண்டும், தமிழ் வளர வேண்டும், வாழ்வதற்கும் வளர்வதற்கும் வேறுபாடு உண்டு. தமிழ் வாழ வேண்டும் என்றால் 9 கோடி தமிழர்களும் தமிழில் பேச வேண்டும். தமிழில் எழுத வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் ஆட்சி மொழியாக என்றென்றும் இருக்க வேண்டும். தமிழ் வளர வேண்டும் என்றால் பல புதிய வடிவங்களில் மாற வேண்டும். இந்த சிறிய நூலகத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. இது தனி நூலகம் அல்ல. ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தின் அங்கம் இந்த நூலகம்.
சிவகங்கை பூமி தமிழ் வளர்த்த பூமி. தமிழ் வளர்த்தவர்களை தாங்கிய பூமி. புலவர்கள் மட்டுமல்ல தமிழ் புரவலர்கள் வாழ்ந்த இந்த மண்ணில் பல்கலைக்கழகத்தின் விதைகளை விதைத்தது வள்ளல் அழகப்பர் எங்களுக்கு கிடைத்த வரம்.
இந்த பல்கலைக்கழகம் வளாகத்தில் வளர்தமிழ் நூலகத்தை நிறுவ முடிந்தது என் குடும்பத்தாருக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. இந்த நூலகத்தில் கொள்ளளவு மிக மிக அதிகம். இன்னும் விரிவுபடுத்தலாம்.
எங்களுக்கு யானை பசி. முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு அரசே இங்கே இருக்கிறது. இந்த நூலகம் யானை பசிக்கு தமிழ் அன்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு கைப்பிடி சோறு தர வேண்டும். தமிழ்நாடு அரசு ஒரு பெரிய பிடிச்சோறு தரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.