என் மலர்
நீங்கள் தேடியது "தொங்கு பாலம் விபத்து"
- என் கண் முன்னால் பாலத்தில் இருந்தவர்கள் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர்.
- என் முன் மரண ஓலத்துடன் பலர் இறந்த அதிர்ச்சியில் இருந்து நான் இன்னும் மீளவே இல்லை.
அகமதாபாத்:
குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 142 பேர் இறந்து விட்டனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த டீ வியாபாரி கூறியதாவது.-
நான் இந்த பகுதியில் டீ விற்று வருகிறேன். நேற்றும் நான் வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். அப்போது தொங்கு பாலம் திடீரென அறுந்து விழுந்தது. எல்லாம் சில விநாடிகளில் நடந்து முடிந்து விட்டது.
என் கண் முன்னால் பாலத்தில் இருந்தவர்கள் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். எங்கு பார்த்தாலும் பலர் தண்ணீரில் மூழ்கியதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தேன்.
7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் கதறியபடி உயிர் விட்டதை பார்த்ததும் நான் மனம் உடைந்து போய் விட்டேன். நானும் என்னால் முடிந்த அளவு உதவி செய்ய முயற்சி செய்தேன். மீட்கப்பட்டவர்களை ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்ல உதவினேன். ஆனாலும் என் முன் மரண ஓலத்துடன் பலர் இறந்த அதிர்ச்சியில் இருந்து நான் இன்னும் மீளவே இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அகமதாபாத்தை சேர்ந்த விஜய் கோஸ்சுவாமி என்ப வர் கூறியதாவது:-
நான் எனது குடும்பத்துடன் தொங்கு பாலத்தில் சென்று கொண்டிருந்தேன். அப்போது சில இளைஞர்கள் தொங்கு பாலத்தை பிடித்து ஆட்டினார்கள். இதனால் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்பதை அறிந்த நான் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு திரும்பி வந்து விட்டேன்.
அந்த சமயம் நான் நினைத்தபடியே பாலம் அறுந்து விழுந்து விட்டது. இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். இளைஞர்கள் பாலத்தை பிடித்து இழுத்துக்கொண்டு இருப்பது குறித்து நான் அங்கு டிக்கெட் விற்று கொண்டிருந்தவர்களிடம் முன்னமே கூறினேன்.
ஆனால் அவர்கள் அதுபற்றி எதுவும் கண்டு கொள்ளாமல் டிக்கெட் கொடுப்பதில் தான் மும்முரமாக இருந்தனர். நான் சொன்னதை அவர்கள் காது கொடுத்து கேட்டு நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த சம்பவம் நடந்து இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
- குஜராத் பாலம் விபத்து நிகழ்வால் என் இதயம் வலியுடன் காணப்படுகிறது.
- குஜராத்தில் இன்று மோடியின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது.
குஜராத் மாநிலம் கெவாடியாவில் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு அவர் இது தொடர்பாக பேசியதாவது:-
குஜராத் பாலம் விபத்து நிகழ்வால் என் இதயம் வலியுடன் காணப்படுகிறது. ஒரு புறம் வலி நிறைந்த இதயமாக இருந்தாலும் மறுபுறம் கடமைக்கான பாதை இருக்கிறது. நான் கெவாடியா பகுதியில் இருந்தாலும் எனது மனம் மோர்பியில் பாதிக்கப்பட்டவர்களுடன் உள்ளது. பாரம்பரிய நடனம் ஆடுவதற்காக நாடு முழுவதும் இருந்து நடன குழுக்கள் கெவாடியாவுக்கு வந்துள்ளன. ஆனால் தற்போதைய சூழ்நிலை காரணமாக அவர்களது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு மோடி பேசினார்.
இந்த சம்பவம் காரணமாக குஜராத்தில் இன்று மோடியின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. ரோடு ஷோ மற்றும் நலத்திட்ட நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க இருந்தார். இதே போல காங்கிரஸ் கட்சியும் நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளது.
- குஜராத் பால விபத்தில் பலியானோருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்தார்.
- குஜராத் பால விபத்துக்கு ரஷியா, சவுதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகள் இரங்கல் தெரிவித்தன.
வாஷிங்டன்:
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்த 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் 8 மாத கால பராமரிப்பு பணிக்கு பின்பு, கடந்த 26-ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. ஆனால், 5 நாட்களில் பாலம் இடிந்து விழுந்து பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.
இந்தப் பால விபத்தில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 177 பேர் மீட்கப்பட்டும் உள்ளனர். சிலர் சிகிச்சையில் உள்ளனர். தொடர்ந்து மீட்பு, நிவாரண பணிகள் நடந்து வருகின்றன.
இந்தத் துயர சம்பவத்திற்கு உலக நாடுகளில் இருந்து இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்,
நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தூபா, இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் அலெக்ஸ் எல்லிஸ், சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சகம், போலந்து நாட்டின் வெளிவிவகார மந்திரி பிக்நியூ ரா உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில், குஜராத் பால விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று நமது இதயம் இந்தியாவுடன் இருக்கிறது. பாலம் இடிந்ததில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஜில் மற்றும் நானும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் பல உயிர்களை இழந்ததற்காக குஜராத் மக்களுடன் இணைந்து துக்கப்படுகிறோம் என தெரிவித்துள்ளார்.
- தனியார் நிறுவனத்தின் காண்டிராக்டர் தொங்கு பாலத்தை தாங்கி பிடிக்கும் கேபிள்களை மாற்றாமல் வர்ணம் மட்டும் பூசி புதுப்பிக்கப்பட்டது போல மாற்றினார்.
- மோர்பி 150 பேர் நிற்கக்கூடிய பாலத்தில் ஒரே நேரத்தில் 400 பேர் இருந்ததால் பாலம் அறுந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் மச்சு நதியில் தொங்குபாலம் அறுந்து விழுந்ததில் 141 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். பாலம் மறு சீரமைப்புக்கு பின் திறந்து 5 நாட்களில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்தது.
முதல் கட்ட விசாரணையில் அதிக பாரம் தாங்காமல் இந்த விபத்து நடந்தது தெரிய வந்தது. 150 பேர் நிற்கக்கூடிய பாலத்தில் ஒரே நேரத்தில் 400 பேர் இருந்ததால் பாலம் அறுந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இந்த தொங்கு பாலத்தை சீரமைக்கும் பணியை மேற்கொண்ட காண்டிராக்டர் அதனை சரிவர செய்யாமல் ஏமாற்றிய விவரம் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. இந்த பாலம் 1879-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும்.
சுமார் 230 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் சிறந்த சுற்றுலா தளமாக இருந்து வருகிறது. 143 ஆண்டுகள் பழமையான பாலம் என்பதால் அதனை சீரமைக்க முடிவு செய்யபட்டு அதற்கான பணியை மேற்கொள்ள கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஓரேவா என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த பணியை முடிக்க வருகிற டிசம்பர் மாதம் வரை அவகாசம் கேட்டு இருந்தார். ஆனால் அடுத்தடுத்து தீபாவளி மற்றும் குஜராத் புத்தாண்டை யொட்டி அதற்கு முன்பாக பணியை முடிக்குமாறு உத்தரவிடப்பட்டதாக தெரிகிறது.
இதனால் அவசரகதியில் இந்த பணி நடந்து கடந்த 26-ந்தேதி மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. தனியார் நிறுவனத்தின் காண்டிராக்டர் தொங்கு பாலத்தை தாங்கி பிடிக்கும் கேபிள்களை மாற்றாமல் வர்ணம் மட்டும் பூசி புதுப்பிக்கப்பட்டது போல மாற்றினார். இதுதான் 141 பேர் உயிர் இழந்ததற்கு காரணமாக அமைந்து விட்டது.
இதனால் அந்த நிறுவனம் முழுமையாக பாலத்தை சீரமைத்ததா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகுதான் விபத்துக்கான முழு விவரம் தெரியவரும்.
இந்தநிலையில் பிரதமர் மோடி நேற்று சம்பவம் நடந்த தொங்கு பாலத்தை நேரில் பார்வையிட்டார். விபத்து தொடர்பாக அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் கூறினார்.
இதையடுத்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:-
விபத்துக்கான காரணம் உடனடியாக கண்டறியப்பட்டால் தான் எதிர்காலத்தில் இதுபோன்று சம்பவம் ஏற்படுவதை தடுக்க முடியும். இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
இயல்பு நிலை திரும்பும் வரை உயர் அதிகாரிகள் சம்பவம் நடந்த பகுதியில் தங்கி இருந்து கண்காணிக்குமாறு அறிவுத்தப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- குஜராத் முதல்-மந்திரியால் ஆட்சி செய்யப்படவில்லை.
- அமலாக்கத்துறை, சி.பி.ஐ. ஆகியவை பா.ஜனதா உத்தரவுபடி செயல்படுகிறது.
புதுடெல்லி:
குஜராத் மாநிலத்தில் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 141 பேர் பலியானார்கள். இச்சம்பவம் தொடர்பாக குஜராத் மாநில அரசு மற்றும் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன.
இந்த நிலையில் மோர்பி பாலம் விபத்து தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பா.சிதம்பரம் கூறியதாவது:-
மோர்பி பாலம் இடிந்து விழுந்த விபத்துக்கு யாரும் மன்னிப்பு கேட்கவில்லை. அல்லது ராஜினாமா செய்யவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. குஜராத் முதல்-மந்திரியால் ஆட்சி செய்யப்படவில்லை. டெல்லியில் இருந்து ஆட்சி செய்யப்படுகிறது. அமலாக்கத்துறை, சி.பி.ஐ. ஆகியவை பா.ஜனதா உத்தரவுபடி செயல்படுகிறது. இதுபோன்ற அமைப்புகளால் கைது செய்யப்பட்டு உள்ளவர்களில் 95 சதவீதம் பேர் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.