என் மலர்
நீங்கள் தேடியது "மங்கள ஆரத்தி போன்றவையும் நடக்கிறது"
- சுப்பிரமணியசாமி திருக்கல்யாணம் சுபிக்ஷா மகாலில் நடக்கிறது.
சேலம்:
சேலம் ஸ்ரீ வாசவி மகிளா சமாஜம் சார்பில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசாமி திருக்கல்யாணம் சேலம் சுகவனேஸ்வரர் கோவில் அருகே சுபிக்ஷா மகாலில் நாளை(செவ்வாய்க்கிழமை)நடக்கிறது. இதையொட்டி காலை 8.30 மணிக்கு வள்ளி, 8.55 மணிக்கு தேவசேனா சமேதராக சுப்பிரமணியசாமி மண்டபத்துக்கு எழுந்தருளல், புண்யாக வாசனம், ரக்ஷாபந்தனம், பாலிகை சங்கல்பம், சுப்பிரமணியர் கன்யாதானம், கன்யகாதானம், மாங்கலிய பூஜை ஆகியவை நடக்கின்றன. பின்னர் மதியம் 12 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து பரதநாட்டியம், அக்சதை ஆசீர்வாதம், மங்கள ஆரத்தி போன்றவையும் நடக்கின்றன.