என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அரசு விரைவு பேருந்து"
- அரசு பேருந்தில் இருந்து துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- சம்பந்தப்பட்ட அரசு பேருந்தில் தடய அறிவியல் துறையினர், கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
நெல்லை:
சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்த அரசு விரைவு பேருந்தில் துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரசு பேருந்தில் இருந்து துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட அரசு பேருந்தில் தடய அறிவியல் துறையினர், கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
- கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தான் அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் இயங்குகின்றன.
- பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.5 முதல் ரூ.30 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னை:
அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
விரைவு பஸ்கள் பெரும்பாலும் 'அல்ட்ரா டீலக்ஸ்' வகையை சார்ந்தது. 2 இருக்கைகள் கொண்டதாக இவை உள்ளன. இதனால் கிலோமீட்டருக்கு ஒரு ரூபாய் வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.
தற்போது கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தான் அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் இயங்குகின்றன.
இதனால் டிக்கெட் கட்டணத்தில் மாற்றம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட பஸ்களின் கட்டணத்தை விட சற்று குறைவாக நிர்ணயிக்கப்பட வேண்டும். மாறாக கூடுதலாக வசூலிப்பதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.5 முதல் ரூ.30 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னை-சேலம் இடையே ரூ.300-ல் இருந்து ரூ.310 ஆகவும், சேலம்-நெல்லை இடையே ரூ.425-ல் இருந்து ரூ.430, நெல்லை-ஓசூர் கட்டணம் ரூ.590-ல் இருந்து ரூ.600 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கட்டம் ரூ.580, ரூ.590 ஆக இருந்த இடங்களுக்கு ரூ.600 ஆகவும் தூரத்தை பொறுத்து ரூ.30 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. சில்லறை பிரச்சினையை காரணம் காட்டி கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் கூறுகையில், "ஏற்கனவே உள்ள பஸ் கட்டணத்தில் ஒரு சில இடங்களுக்கு சற்று குறைவாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதனை சரி செய்யும் வகையில் அந்த வழித்தடத்தில் மட்டும் சிறிய அளவில் கட்டண மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அரசு பஸ்களுக்கு கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை. ஏற்கனவே உள்ளபடி தான் வசூலிக்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் இருந்து பஸ்கள் செயல்பட தொடங்கிய நிலையில் பஸ் கட்டண அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டது. அதில் சில இடங்களில் தவறு நடந்துள்ளது" என்றார்.
- பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் 15-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.
- நேரிலும், ஆன்லைனிலும் டிக்கெட் முன்பதிவு நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15 முதல் 17-ம் தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்வோர் அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.
அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை திங்கள் கிழமையில் வருகிறது. அந்த வகையில், பொங்கலுக்கு முந்தைய சனி மற்றும் ஞாயிறு என இரண்டு வார இறுதி நாட்கள் உள்ளன. இதன் காரணமாக பொங்கலுக்கு முந்தைய வார இறுதியில் சொந்த ஊர் செல்வோர், ஜனவரி 12-ம் தேதி சென்னையில் இருந்து கிளம்புவதற்கு அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.
வழக்கமாக அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய ஒரு மாத காலத்திற்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ள முடியும். அந்த வகையில் போகி பண்டிகைக்கு முதல் நாளான ஜனவரி 13-ம் தேதி சொந்த ஊர் செல்லும் பயணிகள் நாளை நேரிலும், TNSTC வலைதளம் அல்லது செயலியிலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
- அரசு பேருந்துகளில் 200 கி.மீ. தூரத்தில் பயணிக்கும் பயணிகளுக்காக விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
- முன்பதிவு தளமான tnstc.in மற்றும் tnstc mobile app மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
சென்னை:
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தொலைதூரப் பயணிகளின் வசதிக்காக தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறது. இதில் பயணிகளின் பாதுகாப்பிற்கும் மற்றும் வசதியான பயணத்திற்காகவும் ஒரு மாதத்திற்கு முன் இருக்கைகளை இணையதளம் மற்றும் கைபேசி மூலம் முன்பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் தினசரி சுமார் 60000 பயணிகளில் 20.000 பயணிகள் வரை முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர், இந்த வசதியினை அரசு பேருந்துகளில் 200 கி.மீ. தூரத்தில் பயணிக்கும் பயணிகளுக்காக விரிவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக முன்பதிவு சேவை விரிவுப்படுத்தப்படுகிறது.
இதன்காரணமாக தற்போது ஒரு நாளைக்கான முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி 51.046 இருக்கைகளிலிருந்து 62,464 இருக்கைகள் வரை அதிகப்படுத்தி கூடுதல் பயணிகள் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது
இதனடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களிலிருந்து இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை தவிர்த்து பிற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் முன்பதிவு செய்து பயணிக்க இயலும். மேலும், பயணிகள் வழக்கமாக பயன்படுத்தும் முன்பதிவு தளமான tnstc.in மற்றும் tnstc mobile app மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த வசதி 07.06.2023 முதல் நடைமுறைப்படுத்தபடவுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் பயணம் செய்த போது அதன் கூரையில் இருந்து மழைநீர் ஒழுகி பாதிக்கப்பட்ட பயணி ஒருவருக்கு நஷ்டஈடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
- முன்பதிவு செய்த பயணிக்கு அதற்கான இருக்கை வழங்காததால் அரசு விரைவு போக்குவரத்து கழகம் பயணிக்கு ரூ.10 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.
சென்னை:
வக்கீல் சோமசுந்தரம் என்பவர் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் பயணம் செய்ய முன்பதிவு செய்து இருந்தார். அல்ட்ரா டீலக்ஸ் வகையை சேர்ந்த பஸ்சில் சாதாரண பஸ்சை விட கூடுதல் கட்டணம் கொடுத்து பயணித்தார்.
பஸ்சில் இருக்கைகள் மிகவும் மோசமாக இருந்ததோடு நள்ளிரவில் மழைநீர் பஸ்சின் கூரையில் இருந்து ஒழுகியதாகவும் நுகர்வோர் குறைதீர்க்கும் கோர்ட்டில் புகார் அளித்தார். தனக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என அவர் கோரி இருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில் பயணி சோமசுந்தரத்துக்கு ரூ.50 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு நுகர்வோர் குறைதீர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மற்றொரு சம்பவத்திலும் பயணிக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் நஷ்ட ஈடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அப்துல் அஜிஸ் என்ற மூத்த குடிகன் சென்னை கோயம்பேட்டில் இருந்து வேதாரண்யம் செல்ல 9 டிக்கெட் முன்பதிவு செய்தார்.
அவருக்கு உரிய இருக்கைகள் வழங்கவில்லை. 40 இருக்கைகள் கொண்ட அந்த பஸ்சில் அப்துல் அஜிசும், குடும்ப உறுப்பினர்களும் நின்று கொண்டு பயணம் செய்தனர்.
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்பு கொண்ட அப்துல் அஜிஸ் நுகர்வோர் கோர்ட்டில் முறையிட்டார். முன்பதிவு செய்த பயணிக்கு அதற்கான இருக்கை வழங்காததால் அரசு விரைவு போக்குவரத்து கழகம் பயணிக்கு ரூ.10 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்