என் மலர்
நீங்கள் தேடியது "சுப்ரீம் கோர்ட்"
- கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இருவிரல் சோதனை நடத்தக்கூடாது.
- பாலியல் பலாத்கார வழக்குகளில் இருவிரல் பரிசோதனை நடத்தி சான்றிதழ் வழங்குவது நடைமுறையாக உள்ளது.
புதுடெல்லி :
பாலியல் பலாத்கார வழக்குகளில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு ஆஸ்பத்திரியில் இருவிரல் பரிசோதனை நடத்தி சான்றிதழ் வழங்குவது நடைமுறையாக உள்ளது.
இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு பெண் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு செசன்ஸ் கோர்ட்டு தண்டனை விதித்தது. ஆனால், இருவிரல் சோதனை முடிவு அடிப்படையில் செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பை ஐகோர்ட்டு மாற்றி, குற்றவாளியை விடுதலை செய்தது.
ஆனால் இந்த தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஜார்கண்ட் மாநில அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
விசாரணை முடிவில் குற்றவாளிக்கு செசன்ஸ் கோர்ட்டு வழங்கிய தண்டனை தீர்ப்பை உறுதி செய்தும், ஐகோர்ட்டு வழங்கிய விடுதலை தீர்ப்பை ரத்துசெய்தும் நீதிபதிகள் நேற்று தீர்ப்பு வழங்கினர்.
அந்த தீர்ப்பில், கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இருவிரல் சோதனை நடத்தக்கூடாது. இதை மத்திய, மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும். இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி அனைத்து அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் வழங்க வேண்டும்.
இதை மீறி இரு விரல் சோதனையை நடத்தும் எந்தவொரு நபரும் தவறான நடத்தை குற்றவாளியாக கருதப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.
- சம்மனை எதிர்த்து தமிழக அரசு மற்றும் கலெக்டர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
- வழக்கு விசாரணையை மே மாதம் 6-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.
புதுடெல்லி:
தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு மணல் அள்ளப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதில் கிடைத்த வருமானத்தில் சட்டவிரோதமாக பண பரிமாற்றம் நடந்ததாக கூறி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
மேலும் கடந்த செப்டம்பர் மாதம் சட்ட விரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் மற்றும் அதற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். நீர்வளத்துறை அதிகாரிகள் வீடுகளிலும் இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்கள், ரொக்கப்பணம் உள்ளிட்டவைகள் சிக்கியது.
இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி வேலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், அரியலூர் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தமிழக அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த சம்மனை எதிர்த்து தமிழக அரசு மற்றும் கலெக்டர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அமலாக்கத்துறை சம்மனுக்கு தடை விதித்தது. இருப்பினும் விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் என உத்தரவிட்டது.
சம்மனுக்கு தடை விதித்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அமலாக்கத்துறை விசாரணையை எதிர்த்து தமிழக அரசு மற்றும் கலெக்டர்கள் சார்பிலும் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.
இது தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை எதுவும் விதிக்க முடியாது. இந்த வழக்கு முக்கியமானது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளதால் குறிப்பிட்ட தேதியில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் கண்டிப்பாக அமலாக்கத்துறை முன்பு ஆஜராக வேண்டும், இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இதற்கு தமிழக அரசு சார்பில் தற்போது மாவட்ட கலெக்டர்கள் தேர்தல் நடவடிக்கை தொடர்பான பணிகளில் ஈடுபட்டு இருப்பதால் அவர்கள் ஆஜராகும் பட்சத்தில் தேர்தல் பணி பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு வருகிற ஏப்ரல் மாதம் 25-ந்தேதி அமலாக்கத்துறை முன்பு 5 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை மே மாதம் 6-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுபடி வருகிற 25-ந்தேதி மணல் கொள்ளை வழக்கு சம்பந்தமாக கலெக்டர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நாடு முழுவதும் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
- காலியாக உள்ள என்.ஆர்.ஐ. இடங்களை கூட பொதுப்பிரிவு கலந்தாய்வில் நிரப்பலாம்.
புதுடெல்லி:
மருத்துவ கல்லூரிகளில் பல்வேறு காரணங்களால் மாணவர்கள் சேர்க்கை முழுமையாக நிறைவடையவில்லை.
பல இடங்கள் இன்னும் காலியாக உள்ளது. இதையடுத்து கவுன்சிலிங் முடிந்த பிறகு காலியாக உள்ள இடங்களை உடனே நிரப்ப வேண்டும் என லக்னோ மருத்துவ கல்லூரி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடைசி சுற்று கவுன்சிலிங் முடிந்த பிறகு காலி இடங்கள் இருந்தால் சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர். அவர்கள் தங்கள் உத்தரவில் கூறி இருப்பதாவது:
நாடு முழுவதும் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாணவர்கள் சேர்க்கையை முழுமையாக நடத்தாமல் இருப்பது தவறு.
இதனால் இந்த மாதம் 30-ந்தேதிக்குள் மருத்துவக் கல்லூரிகளில் எத்தனை காலி இடங்கள் இருக்கிறதோ, அவற்றை உடனே நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் என்ன பிரச்சனை இருந்தாலும் அதனை தீர்த்து சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்தி அனைத்து மாணவர்கள் சேர்க்கை நடவடிக்கையும் முடிக்க வேண்டும். காலியாக உள்ள என்.ஆர்.ஐ. இடங்களை கூட பொதுப்பிரிவு கலந்தாய்வில் நிரப்பலாம்.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.