என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வி.ஏ.ஓ.க்கள்"

    • கட்டாயம் தொடர்பு எண்கள் எழுதி வைத்திருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.
    • அலுவல் நிமித்தமாக மதியத்துக்கு பிறகே வெளியே செல்ல வேண்டும்.

    திருப்பூர்:

    கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமத்தில் கட்டாயம் இருக்க வேண்டுமென வருவாய்த்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், வி.ஏ.ஓ.,க்கள், நில வருவாய் ஆய்வாளர்கள், மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கின்றனர். வி.ஏ.ஓ.,க்கள் பணி நாட்களில், மதியம் வரை கட்டாயம் அலுவலகத்தில் இருக்க வேண்டும். அலுவல் நிமித்தமாக மதியத்துக்கு பிறகே வெளியே செல்ல வேண்டும். வெளியே செல்லும் காரணத்தை தகவல் பலகையில் எழுதி வைத்து செல்ல வேண்டும்.கட்டாயம் தொடர்பு எண்கள் எழுதி வைத்திருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.

    • மேலூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • வி.ஏ.ஓ.க்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது.

    மேலூர்

    தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக இருந்த லூர்து பிரான்சிஸ் மணல் கடத்தலை தடுத்ததற்காக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து மேலூர் தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மேலூர் தாலுகா அளவிலான வி.ஏ.ஓ.க்கள், வருவாய்த்துறையினர் பங்கேற்றனர்.

    ×