என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காலணிகள்"
- நல்ல காலணிகளை மட்டுமே திருடிச் செல்வது வீடியோவில் பதிவாகியுள்ளது.
- இந்த வீடியோ 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
பெங்களூரு நகரில் திருடன் ஒருவர் அடுக்குமாடிக் குடியிருப்பில் புகுந்து காலணிகளை திருடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அந்த வீடியோவில், முகமூடி அணிந்த திருடன் ஒவ்வொரு ஜோடி காலணிகளையும் சோதித்து நன்றாக உள்ளதா என்று பார்த்து நல்ல காலணிகளை மட்டுமே திருடிச் செல்வது பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் நடந்த இடம் மற்றும் நேரம் சரியாக தெரியவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பு இணையத்தில் வெளியான இந்த வீடியோ 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து பெங்களூரு நகரின் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்றும் காவல்துறை இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
- தேவர் ஜெயந்தி விழாவுக்கு வருபவா்களின் காலணிகளை பாதுகாக்க போலீசார் நியமிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.
- இந்த செய்தி முற்றிலும் தவறானது என்று ராமநாதபுரம் கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார்.
ராமநாதபுரம்
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் ஜெயந்தி விழா, குரு பூஜை விழாவுக்கு வருபவா்களின் காலணிகளை பாதுகாக்க போலீசார் நியமிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல் தவறானது என்று மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் 30-ந் தேதி அன்று பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் 115-வது பிறந்தநாள் விழா மற்றும் 60-வது குருபூஜை விழா நடைபெற்றது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளும் போது ஒவ்வொரு ஆண்டும் காலணிகளை விட்டுச் செல்லும் பொதுமக்கள் தரிசனம் முடிந்து திரும்ப எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டதை கருத்தில் கொண்டு இந்தாண்டு அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்களின் காலணி களை முன்பக்கம் விட்டு சென்று விட்டு நினை விடத்தில் தரிசனம் முடிந்து பின்பக்கம் வாசல் வழியாக காலணிகளை எடுத்து செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.
அத்தியாவசிய அலுவலகப்பணி காரணமாக இந்தாண்டு இதற்கான பணிகள் மேற்கொள்ளவில்லை. முக்கிய பிரமுகர்களின் காலணிகளை பாதுகாக்க காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள், வருவாய்த்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகப் பணியாளர்கள் பணி மேற்கொண்டதாக தவறான செய்திகள் வெளிவந்துள்ளது. இத்தகைய செய்தி முற்றிலும் தவறாகும். பொதுமக்களுக்கோ, முக்கிய பிரமுகர்களுக்கோ காலணிகளை பாதுகாக்க காவல் துறையினரையோ, வருவாய் துறையினரையோ, பேரூராட்சி துறையினரையோ பணி நியமிக்கப்படவில்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்