என் மலர்
நீங்கள் தேடியது "தூய்மை பணியாளர்கள் குடியிருப்பு"
- 77 நிரந்தர தூய்மை பணியாளர்கள் நகராட்சியில் பணியாற்றி வருகின்றனர்.
- மாடியில் வைத்துள்ள குடிநீர் தொட்டியில் நீர்கசிவு ஏற்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இந்த நகராட்சியில் 131 தற்காலிக, 77 நிரந்தர தூய்மை பணியாளர்கள் நகராட்சியில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களில் நிரந்தர பணியாளர்கள் 60 பேருக்கு நகராட்சிக்குட்பட்ட 2-வது வார்டு வெள்ளிப்பாளையம் பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு அரசு சார்பில் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு 60 குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 8 மாதமாக கட்டிடத்தின் மாடியில் வைத்துள்ள குடிநீர் தொட்டியில் நீர்கசிவு ஏற்பட்டு, வீடுகளுக்குள் வருவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் குடும்ப த்தினர் கூறியதாவது:
கடந்த 8 மாதமாக குடிநீர் தொட்டியில் குழாய் உடைந்து தண்ணீர் கசிந்து வீடுகளுக்குள் வருகின்றன. இதனால் வீட்டில் குடியிருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சிலர் இதனால் வீட்டை காலி செய்துவிட்டு வாடகை வீட்டுக்கு குடியேறி யுள்ளனர். நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளையும் தூய்மை செய்யும் எங்களுக்கு எங்கள் பகுதிக்கு தூய்மை பணி செய்ய நகராட்சி அதிகாரிகள் நியமிக்கப்படுவதில்லை. இதனால் எங்கள் பகுதி குப்பை மேடாக காட்சியளிக்கிறது.
குடியிருப்பு கட்டிடங்களில் கழிவுநீர் குழாய்கள் உடைந்து நடைபாதைகளில் தண்ணீர் வழிந்து வருவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சம்பந்த ப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்த போது இக்குடியிருப்புகளை சீரமைக்க ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளதாக நகராட்சி ஆணையாளர் வினோத் கடந்த 6 மாதத்திற்கு முன்பு தெரிவித்தார். ஆனால் இன்று வரை எங்கள் பகுதியில் எந்த அடிப்படை பிரச்சனைகளும் நிறைவேற்றப்படாமல் நோய் தாக்கும் சூழ்நிலை தொடர்ந்து வருகிறது.
இக்குடியிருப்பை யொட்டி உள்ள கழிவுநீர் ஓடை செல்லும் பகுதி புதர் மண்டி உள்ளது. இதனால் புதர்களில் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடியிருப்புகளில் சர்வ சாதாரணமாக வந்து செல்கின்றன. இதோடு கரட்டுமேடு, வெள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த சிலர் மொட்டை மாடியில் இரவு நேரங்களில் மது அருந்தி தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக காவல்துறை, நகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.