என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஊரக வளர்ச்சி வங்கி"
- நாமக்கல் மாவட்டம் சேலம் சாலையில் அமைந்துள்ள எல்.எம்.ஆர். காம்ப்ளக்ஸ் முதல் தளத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா நடந்தது.
- விழாவில் கே.ஆர்.என். ராஜேஸ்குமார் எம்.பி. கலந்துகொண்டு மண்டல அலுவலகத்தை திறந்து வைத்தார்.
நாமக்கல்:
தமிழ்நாடு கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரகவளர்ச்சி வங்கி சென்னையை தலைமை இடமாக கொண்டு மாநிலம் முழுதும் 19-மண்டல அலுவலகங்கள் 6 நகைக் கடன் சேவை மையங்களுடன் செயல்பட்டுவருகிறது.
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தர அனுமதியுடன் இதன் 20-வது மண்டல அலுவலகம் நாமக்கல் மாவட்டம் சேலம் சாலையில் அமைந்துள்ள எல்.எம்.ஆர். காம்ப்ளக்ஸ் முதல் தளத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா நடந்தது. விழாவில் கே.ஆர்.என். ராஜேஸ்குமார் எம்.பி. கலந்துகொண்டு மண்டல அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த அலுவலகம் சேலம் மண்டலத்தில் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது நாமக்கல் மாவட்டத்திலுள்ள 7 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் மற்றும் கரூர் வட்டத்திலுள்ள 3. தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளை இணைத்து புதியதாக நாமக்கல்லில் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாமக்கல் மாவட்ட பொது மக்களுக்கு கூடுதலாகவும் விரைவாகவும் வங்கிச்சேவை கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள–தாகவும் விரைவில் விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் பண்ணை சார்ந்த கடன்கள், கால்நடை வளர்ப்பு கடன்கள், டிராக்டர் கடன்கள் உள்ளிட்ட கடன்கள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ராஜேஸ்குமார் எம்.பி. தெரிவித்தார்.
இவ்வங்கியில் நகைகடன் மற்றும் இட்டுவைப்புக் கடன்கள் வழங்கப்பட்டுவருகிறது. இட்டுவைப்புகளுக்கு 6.75 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரை வட்டி வழங்கப்பட்டுவருகிறது.
விழாவில் நாமக்கல் எம்.எல்.ஏ. ராமலிங்கம், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வக்குமரன், நாமக்கல் நகர் மன்றத் தலைவர் கலாநிதி, துணைப்பதிவாளர்கள் கர்ணன் மற்றும் கே.ஆர்.ஏ. விஜயகணபதி மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள், வங்கியின் துணைப் பொதுமேலாளர், மண்டல மேலாளர் மற்றும் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிப் பணியாளர்கள் பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்