என் மலர்
நீங்கள் தேடியது "ஐ.ஐ.பி. லெட்சுமிராமன் பள்ளி"
- ஐ.ஐ.பி. லெட்சுமிராமன் குளோபல் பள்ளியில் 22-ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
- மாணவ, மாணவிகளுக்கு கராத்தே, சிலம்பாட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.
நெல்லை:
பாளை. ஐ.ஐ.பி. லெட்சுமிராமன் குளோபல் பள்ளியில் 22-ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. நெல்லை ஆக்கி பிரிவு தலைவரும், தமிழ்நாடு ஆக்கி பிரிவு நிர்வாக குழு உறுப்பினருமான சேவியர் ஜோதி சற்குணம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
முன்னதாக 11-ம் வகுப்பு மாணவர் பாலகுமார் வரவேற்றார். பள்ளி தாளாளர் அனந்தராமன் சிறப்பு விருந்தினரை கவுரவித்தார். நிர்வாக இயக்குநர் ராஜ்குமார், மேனஜிங் டைரக்டர் சுரேஷ்குமார், லெட்சுமி ராமன் அறக்கட்டளை உறுப்பினர்கள் தீபா ராஜ்குமார், ராஜேஸ்வரி சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி விளையாட்டு அறிக்கையினை உடற்கல்வி ஆசிரியர் சங்கர் வாசித்தார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு கராத்தே, சிலம்பாட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. பெற்றோர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டது. ஆசிரியர்கள் செண்பகம், சபரிநாதன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். பள்ளி முதல்வர் இந்துமதி, தலைமை ஆசிரியை சூரியகலா, உடற்கல்வி ஆசிரியை அன்னை செல்பினா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பிளஸ்-2 மாணவி தர்ஷனா நன்றி கூறினார்.