என் மலர்
நீங்கள் தேடியது "குடியிருக்கும் பகுதி"
- ஊராட்சியின் தெரு விளக்குகளை முறையாக பயன்படுத்த வேண்டும்.
- கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் வேண்டுகோள்
நாகர்கோவில்:
உள்ளாட்சி தினமான இன்று அனைத்து ஊராட்சி களிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த அரசு உத்தர விட்டது.
அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபைக் கூட்டம் நடந்தது. அகஸ்தீஸ்வரம் யூனியன் நல்லூர் ஊரா ட்சிக்குட்பட்ட இளைய நயினார் குளம் படிப்பகம் அருகில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர்அரவிந்த் கலந்து கொண்டார்.
அவர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து அவர் பேசு கையில், ஒவ்வொருவரும் தாங்கள் குடியிருக்கும் பகுதி களில் முழு சுகாதாரத்தை கடைபிடித்திட வேண்டும். உங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் கேட்டுப் பெற முன் வர வேண்டும் என்றார்.
வடகிழக்கு பருவமழை கால முன்னெச்சரிக்கையாக தாழ்வான மற்றும் மழைநீர் தேங்க கூடிய பகுதிகளை அடையாளம் கண்டு, அங்கு மழைநீர் தேங்காமல் செல்ல வழிவகை செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம்மூலம் அவ்வப்போது தரப்படும் முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் .
ஊராட்சியின் தெரு விளக்குகளை முறை யாக பயன்படுத்த வேண் டும். தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் அனைத்து நலத்திட்ட உதவி கள் குறித்து பொதுமக்கள் அனைவரும் அறிந்து பயன் பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கூட்டத்தில் அகஸ் தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய தலைவர்அழகேசன் மற்றும் துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் .