search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலைகள் கொள்ளை"

    • சாமி சிலைகளை மர்ம நபர் திருடி சென்றுவிட்டார்.
    • முறையான சடங்குகளுடன் கோவிலில் சிலை மீண்டும் நிறுவப்பட்டு வருகிறது.

    உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் இருந்து சிலையைத் திருடிய திருடன் செவ்வாயன்று (அக்டோபர் 1, 2024) அதை அவனிடம் திருப்பிக் கொடுத்தான். திருடன் சிலையுடன் மன்னிப்புக் கடிதத்தையும் விட்டுச் சென்றுள்ளார். இதில் கோவிலில் நடந்த திருட்டு சம்பவத்தை தொடர்ந்து தனக்கு நடக்கும் அசம்பாவிதங்கள் குறித்து பேசியுள்ளார். முறையான சடங்குகளுடன் கோவிலில் சிலை மீண்டும் நிறுவப்பட்டு வருகிறது. ஒப்இந்தியாவிடம் பேசிய மஹந்த் ஜெய்ராம் தாஸ், திருடன் சிலையை ஆசிரமத்தின் வாயில் அருகே சணல் சாக்கில் வைத்து விட்டு சென்றதாக கூறினார்.

    உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டம் பிரயாக்ராஜ் பகுதியில் புகழ்பெற்ற கவுகாட் கஸ்லா ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் கட்டப்பட்ட கோவிலின் கருவறையில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான ராதா-கிருஷ்ணரின் அஷ்டதாது சிலை நிறுவப்பட்டுள்ளது.

    நேற்று முந்தினம் இந்த சாமி சிலைகளை மர்ம நபர் திருடி சென்றுவிட்டார். இது குறித்து கோவில் நிர்வாகி மஹந்த் ஜெய்ராம் தாஸ் நவாப்கஞ்ச் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர்.

    சிலை திருட்டு போனதால் கோவில் நிர்வாகி மஹந்த் ஜெய்ராம் தாஸ் சாப்பிடாமல் கவலையில் மூழ்கினார். ஆசிரமத்தில் இருந்த மற்ற சீடர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்த சூழலில் திருட்டு நடைபெற்ற மறுநாளான நேற்று கோவிலுக்கு அருகே ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. அப்பகுதியினர் அது என்னவாக இருக்கும் என்று அதை பிரித்து பார்த்தனர்.

    அந்த மூட்டைக்குள் கோவிலில் திருடப்பட்ட ராதை-கிருஷ்ணரின் அஷ்ட தாது சிலைகள் இருப்பதைக் கண்டு வியப்படைந்தனர். மேலும் அந்த மூட்டையில் இந்தியில் எழுதப்பட்ட ஒரு கடிதமும் இருந்தது. அந்த கடிதத்தில் எழுதப்பட்ட வாசங்களை அங்கிருந்தவர்கள் வாசித்தபோது மேலும் அதிர்ச்சி அடைந்தனர். கோவில் நிர்வாகிக்கு எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தில், "நான் பாவம் செய்து விட்டேன். எனது அறியாமையால் கிருஷ்ணர், ராதை சிலைகளை திருடினேன். சிலை திருடிய நாளில் தொடங்கி கெட்ட கெட்ட கனவுகளால் அவதிப்பட்டு வருகிறேன்.

    மேலும் என்னால் தூங்கவோ சாப்பிடவோ நிம்மதியாக வாழவும் முடியவில்லை.

    பணத்துக்காக திருடியதால் என் மகனும் மனைவியும் கடுமையாக நோய்வாய் பட்டுள்ளனர். நான் சிலையை விற்கும் நோக்கத்தில் அதை கொள்ளையடித்தேன். என் தவறுக்கு மன்னிப்பு கேட்டு சிலையை விட்டு செல்கிறேன். என் தவறை மன்னித்து, சிலைகளை மீண்டும் கோவிலில் வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். எங்கள் குழந்தைகளை மன்னித்து சாமி சிலைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று எழுதப்பட்டிருந்தது.

    இதை தொடர்ந்து அந்த பகுதியினர் நவாப்கஞ்ச் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து சிலையையும், கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் அந்த சிலைகள் கோவில் நிர்வாகியிடம் ஒப்படைக்கப்பட்டது. சிலை திரும்ப வந்ததால் ஆசிரமத்தில் இருந்தனா இவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அதைத் தொடர்ந்து சிலைகளுக்கு ஜலாபிஷேகம் செய்து பூஜைகள் செய்து மீண்டும் பிரதிஷ்டை செய்தனர்.

    • ஸ்ரீ வேணுகோபால்சாமி கோவிலில் 2 அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய மூன்று சிலைகள் இருந்தன.
    • இன்று காலை கோவிலின் இரும்பு கேட் உடைந்து கோவில் கதவு திறந்து கிடந்தது.

    திருவொற்றியூர்:

    மணலி, சி.பி.சி.எல் நகரில், ஸ்ரீ வேணுகோபால்சாமி கோவில் உள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவிலில் 2 அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய மூன்று சிலைகள் இருந்தன.

    இந்த நிலையில் இன்று காலை கோவிலின் இரும்பு கேட் உடைந்து கோவில் கதவு திறந்து கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மணலி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் சுந்தர் தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கோவிலில் இருந்த ஸ்ரீதேவி, பூதேவி ஐம்பொன் சிலைகள் கொள்ளைபோய் இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து கிராம தலைவர் வெங்கடேசன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிலில் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொள்ளை போன ஐம்பொன் சிலைகளின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என்று தெரிகிறது.

    ×