என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நர்சு வேலை"

    • கனடாவில் நர்சு வேலை வாங்கி தருவதாக மெயில் மூலம் ரூ.1.40 லட்சம் மோசடி நடந்துள்ளது.
    • பணத்தை பெற்று கொண்டவர்கள் மீண்டும் சில காரணங்களை குறிப்பிட்டு ரூ.1லட்சத்து 8ஆயிரத்து 517-ஐ அனுப்பி வைக்கும்படி கேட்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள சித்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி (வயது23). இவர் நர்சிங் படித்து முடித்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார்.

    கடந்த 2022 செப்டம்பர் மாதம் பிரியதர்ஷினி தனியார் வேலைவாய்ப்பு இணையதளத்தில் வேலைக்காக பதிவு செய்து வைத்திருந்தார். இந்த நிலையில் 25.9.2022-ந் தேதி இவரது மெயில் முகவரிக்கு கனடாவில் நர்சு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்கிறார்கள் என்று குறிப்பிட்டு விவரத்தினை கேட்டு அனுப்பி உள்ளனர்.

    அவர்கள் தெரிவித்த விதிமுறைகளை தெரிந்து கொண்டு, கொடுக்கப்பட்ட வங்கி கணக்கு எண்ணுக்கு தனது உறவினரான மதன் என்பவரது வங்கி கணக்கில் இருந்து 2 தவணைகளாக முதலில் ரூ.57 ஆயிரத்து 400 மற்றும் ரூ.82ஆயிரத்து 979 மொத்தம் ரூ.1 லட்சத்து 40ஆயிரத்து 379 அனுப்பினார்.

    பணத்தை பெற்று கொண்டவர்கள் மீண்டும் சில காரணங்களை குறிப்பிட்டு ரூ.1லட்சத்து 8ஆயிரத்து 517-ஐ அனுப்பி வைக்கும்படி கேட்டனர். சந்தேகம் அடைந்த பிரியதர்ஷினி இவ்வளவு பணம் தன்னால் அனுப்ப இயலாது, தனக்கு வேலை வேண்டாம் என்று குறிப்பிட்டு அவர்களால் கொடுக்கப்பட்ட திரும்ப பணம் பெறும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வாட்ஸ்ஆப் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தார்.

    தொடர்ந்து எந்த வித தகவலும் தெரிவிக்க வில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரியதர்ஷினி இது குறித்து ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×