என் மலர்
நீங்கள் தேடியது "கருங்கல்பாளையம் சந்தையில்"
- ஈரோடு கருங்கல்பாளையத்தில் இன்று வழக்கம் போல் மாட்டு சந்தை கூடியது.
- இன்று 90 சதவீதம் மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம்.
மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வர்.
இதேபோல் விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
இன்று வழக்கம் போல் மாட்டு சந்தை கூடியது. 350 பசு மாடுகள், 150 எருமை மாடுகள், 50 வளர்ப்பு கன்றுகள் என மொத்தம் 550 மாடுகள் விற்பனைக்கு வந்து இருந்தன. இது கடந்த வாரத்தை விட குறைவு.
தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் மாடுகள் வரத்து குறைந்துள்ளன.
எனினும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. பசு மாடுகள் ரூ.45 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரையும், எருமை மாடுகள் ரூ.45 ஆயிரம் வரையும், வளர்ப்பு கன்றுகள் ரூ.15 ஆயிரம் வரையும் விற்பனையானது.
இன்று 90 சதவீதம் மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.